Cloudflare தளத்தால் சேவை முடக்கம்.. ஜெரோதா, க்ரோவ், ஏஞ்சல் தளங்கள் பாதிப்பு..? எவ்வளவு இழப்பு..?

டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு அதிகரித்து வரும் வேளையில், கோடிக்கணக்கான மக்கள் இதை பயன்படுத்தி வரும் வேளையில் 24 மணிநேரமும் சரியான இணைப்பு அவசியம், இல்லையென்றால் பல பில்லியன் டாலர் அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இப்படியொரு பிரச்சனை தான் தற்போது நடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அமெரிக்காவைச் சேர்ந்த இணைய சேவை நிறுவனமான கிளவுட்ஃப்ளேர் தளத்தில் ஏற்பட்ட பெரும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக தளங்களான ஜெரோதா, க்ரோவ், ஏஞ்சல் ஒன் ஆகியவை சில மணி நேரம் முடங்கியது.

Cloudflare தளத்தால் சேவை முடக்கம்.. ஜெரோதா, க்ரோவ், ஏஞ்சல் தளங்கள் பாதிப்பு..? எவ்வளவு இழப்பு..?

Cloudflare தளத்தில் பராமரிப்புப் பணி காரணமாக ஏற்பட்ட இந்த இடையூறு, பங்கு வர்த்தக தளங்கள் மட்டும் அல்லாமல் பல டெக் சேவை தளங்கள், செய்தி நிறுவனங்களின் இணைய தளங்கள், மொபைல் ஆப் என பலவும் இயங்கவில்லை. இந்த பாதிப்பு மூலம் ஈகாமர்ஸ், ப்ரோகரேஜ் தளங்களில் நிதி இழப்பும் ஏற்பட்டு இருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.

Cloudflare தளத்தை இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் அதிகளவில் பயன்படுத்தும் தளம் என்பதால் இந்த பிரச்சனை நாடு முழுவதும், உலகம் முழுவதும் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தியது. டிவிட்டர் தளத்தை திறந்தால் Cloudflare தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து டிவீட் பறக்கிறது.

X தளத்தில் பலர் தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்தனர். "ஆர்டர் போட முடியவில்லை", "லாகின் ஆகவில்லை", "மார்கெட் நேரத்தில் தளமே ஓபன் ஆகவில்லை" என்று புகார்கள் பறந்தன. குறிப்பாக மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இந்தப் பிரச்சனை உச்சத்தில் இருந்தது. இது போன்ற திடீர் இடையூறு, பங்குச் சந்தையில் விலை மாற்றம் நடக்கும் நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்ட வாய்ப்பு உள்ளது.

ஆனால் இன்று ஏற்பட்ட இடையூறு காரணமாக எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் Cloudflare தளத்தில் இதேபோன்ற பாதிப்பு நவம்பர் மாதம் நடந்தது. இதில் எத்தனை கோடி இழப்பு தெரியுமா..?

கிளவுட்ஃப்ளேர் என்றால் என்ன? ஏன் இவ்வளவு முக்கியம்?
2009இல் தொடங்கப்பட்ட கிளவுட்ஃப்ளேர் நிறுவனம், உலகம் முழுவதும் இணைய உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, இணையதளம் மற்றும் ஆப்களை உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் வேகமாக பயன்படுத்தும் ஒரு சேவையை வழங்குகிறது.

இது மக்களுக்கும் ஒரு நிறுவனத்தின் சர்வர்களுக்கும் இடையில் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. ஹேக்கர் தாக்குதல்களை (DDoS) தடுக்கிறது, கண்டென்ட்-ஐ விரைவாக டெலிவரி செய்யும் CDN சேவை வழங்குகிறது. நியூயார்க் பங்குச் சந்தையில் NET என்ற பெயரில் பட்டியலிடப்பட்டுள்ள இந்நிறுவனம், உலகளவில் கோடிக்கணக்கான இணையதளங்கள், ஆப்ஸ்களுக்கு சேவை வழங்கி வருகிறது. இந்தியாவில் ஜெரோதா, க்ரோவ் போன்ற பல தளங்கள் இதன் சேவையைப் பயன்படுத்துகின்றன.

முந்தைய இடையூறு:
நவம்பர் 18 அன்று கிளவுட்ஃப்ளேர் தளத்தில் ஏற்பட்ட இதேபோன்ற சேவை பாதிப்பு சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. இந்த சேவை முடக்கம் உலகளாவிய நிதி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

சைப்ரஸ் நாட்டை சேர்ந்த Finance Magnates இதழ் வெளியிட்ட அறிக்கையின்படி, நவம்பர் 18 பாதிப்பு மூலம் FOREX மற்றும் CFD புரோக்கர்களுக்கு சுமார் 1.58 பில்லியன் டாலர் (சுமார் 14,220 கோடி ரூபாய்) வர்த்தக இழப்பு ஏற்பட்டது என தெரிவித்துல்ளது. இது அவர்களது மாதாந்திர வருவாயில் 1 சதவீதம் ஆகும். நவ்.18 பாதிப்பில் Monaxa, Skilling, Xtrade, FXPro போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

க்ரோவ் பங்குகள்
Cloudflare தளத்தின் சேவை இடர்பாடு மூலம் பாதிப்பு இருந்தாலும், க்ரோவ் பங்குகள் பாதிக்கப்படவில்லை. தேசிய பங்குச் சந்தையில் 3.6 சதவீதம் உயர்ந்து ரூ.150.60 வர்த்தகமானது. மதியம் 3 மணி வரை சுமார் 4.5 கோடி பங்குகள் பரிமாற்றம் ஆனது. ஜெரோதா, ஆங்கல் ஒன் போன்ற தளத்தில் அதன் வாடிக்கையாளர்கள் பாதிப்பை எதிர்கொண்டனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+