இந்திய ஐடி துறையில் இருக்கும் நிறுவனங்கள் சிறிதும் பெரிதுமாகப் பல ஐடி சேவை மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் திட்டத்தை உலகம் முழுவதிலும் இருந்து பெற்று வருகிறது.
இத்திட்டங்களை வேகமாகவும் திறம்படச் செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கும் ஐடி சேவை நிறுவனங்கள் தொடர்ந்து அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் சேர்த்து வருகிறது.
இதன் படி க்ளோவர் இன்போடெக் நிறுவனம் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 2000 பிரஷ்ஷர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
க்ளோவர் இன்போடெக்
இந்தியா மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஐடி சேவை மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் கூட்டணி நிறுவனமான க்ளோவர் இன்போடெக்-ன் வாடிக்கையாளர்கள் மத்தியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.
2000 பிரஷ்ஷர்களுக்கு வேலை
இந்த டிமாண்ட்-ஐ சமாளிக்கப் புதிதாக 2000 பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. இதில் 1000 ஊழியர்களைச் செப்டம்பர் 2021க்குள் பணியில் சேர்க்கவும், மீதமுள்ளவர்களை நடப்பு நிதியாண்டின் முடிவிற்குள் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
சென்னை, பெங்களூர்
க்ளோவர் இன்போடெக் சென்னை, பெங்களூர் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் காரணத்தால் பட்டப்படிப்பை முடித்து ஐடி துறைக்குள் நுழைய வேண்டும் என நினைக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் இது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
கொரோனாவுக்குப் பின்பு
கொரோனாவுக்குப் பின்பு அனைத்துத் துறை நிறுவனங்களும் டெக்னாலஜியை அதிகம் பயன்படுத்தி வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் டெக் சேவைகளைப் பெற நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று ஐடி ஊழியர்களுக்கான டிமாண்ட்-ஐ அதிகரித்துள்ளது. இதேபோல் புதிய தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்கள் க்ளோவர் இன்போடெக் போன்ற நிறுவனத்தை நாடி வருகிறது.
புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி
க்ளோவர் இன்போடெக் பிரஷ்ஷர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் புதிய தொழில்நுட்பத்தில் பயற்சி அளித்துப் பணியில் அமர்த்துகிறது. தற்போது க்ளோவர் இன்போடெக்-ன் க்ளோவர் அகாடமி டிஜிட்டல் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை தளம், டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட், என்டர்பிரைசர்ஸ், பிஸ்னஸ் அப்ளிகேஷன் ஆகிய பிரிவில் பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்துகிறது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications