உலகம் முழுவதும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இயற்கை பொருட்களை பயன்படுத்தியே நீண்ட நாளுக்கு பொருட்களை தயாரிக்க முடியாது. ஏனென்றால் ஒரு கட்டத்தில் அதற்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரித்து சாமானிய மக்களால் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
இதனை கருத்தில் இயற்கை பொருளுக்கு மாற்றாக புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகளை கண்டுடிபிடிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் தற்போது அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

உதாரணமாக ஆடு, மாடுகள் போன்ற விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தோல் பொருட்களை சொல்லலாம். இயற்கை தோலுக்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகம் போன்ற காரணங்களால் செயற்கை தோலை விஞ்ஞானிகள் உருவாக்கினர். தற்போது செயற்கை தோலுக்கு மாற்றாக மாம்பழக் கூழை பயன்படுத்தி தோல் பொருட்களை செய்யும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னையில் செயல்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், மாம்பழக் கூழை பயன்படுத்தி தோல் போன்ற பொருட்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மும்பை தளமாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான அமாதி கிரீன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு இதற்கான தொழில்நுட்பட உரிமை வழங்கியுள்ளது.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பி.தணிகைவேலன் கூறுகையில், மாம்பழக் கூழுடன் பயோபாலிமர்-ஐ திரவ அல்லது தூள் வடிவில் கலக்கப்படுகிறது. பின்னர் அது ஒரு எளிய முறையின் மூலம் தாள் போன்ற பொருளாக மாற்றப்படும். பின்பு அதற்கு மேற்பரப்பு பூச்சு மற்றும் அலங்கார வடிவங்கள் சேர்க்கப்படும்.
இதனை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மேங்கோ லெதர் பைகள் மற்றும் லேப்டாப் பேக்குகள் ஆயுள் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளன. தற்போது காலணிகளில் பயன்படுத்தும் வகையில் இந்த பொருளின் சிறப்பு இயல்புகளை மேம்படுத்துவதற்கான பணிகள் செய்யப்படுகிறது.
இழுவிசை வலிமை மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால் இயற்கையான தோலுடன் போட்டியிடக்கூடிய பொருள் எதுவும் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக சந்தையில் இருக்கும் பி.வி.சி. மற்றும் பி.யு. போன்ற செயற்கை லெதரால் செய்யப்பட்ட பொருட்களை வேண்டாம் என்றும் குப்பையில் போடும்போது, அவை மக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.
அதேசமயம் நாங்கள் செய்தது, ஒரு இயற்கை பொருளை (மாம்பழக் கூழ்) சுற்றுச்சூழலுக்கு உகந்த பாலிமருடன் இணைத்து மக்கள் தோல் போன்ற பொருளை உருவாக்கியுள்ளோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகள் மற்றும் பேக்குகளை உருவாக்க பேஷன் நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளுடன் நாங்கள் ஒத்துழைப்போம்.
இந்த பொருளை உற்பத்தி செய்வதற்கான செலவு செயற்கை தோலை காட்டிலும் 60 சதவீதம் குறைவாகும். தற்சமயம் உலக அளவில் மாம்பழத்தை அடிப்படையாக கொண்ட தோல் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் நெதர்லாந்தில் உள்ளது என தெரிவித்தார்.
சர்வதேச அளவில் மாம்பழ உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. ஆண்டுக்கு சுமார் 2 கோடி டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு பொருந்தாத காரணத்தால் இதில் 40 சதவீதம் வரை விளைநிலங்களிலேயே கழிக்கப்படுகின்றன.
இது விவசாயிகளுக்கு பெரிய வருமான இழப்பாகும். அதேசமயம் மாம்பழக் கூழை பயன்படுத்தி தோல் போன்ற பொருட்களை தயாரிக்கும் இந்த புதிய தொழில்நுட்பம் முழு வீச்சில் பயன்பாட்டுக்கு வந்தால் விவசாயிகளுக்கு பெரிய வரப் பிரசாதமாக இருக்கும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications