லாபத்தினை அள்ள இது தான் சரியான நேரம்.. CLSA சொல்வதை பாருங்க..!

இந்திய பங்கு சந்தைகள் தற்போது வரலாறு காணாத அளவு உச்சத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி இரண்டுமே அதன் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றது.

இது லாபத்தினை புக் செய்ய சரியான இடம் என CLSA தெரிவித்துள்ளது.

ஏனெனில் இது அதிகரித்து வரும் எண்ணெய் விலை, அதிகரித்து வரும் மூலதன பொருட்கள் விலை, நிறுவனங்களின் மார்ஜின் விகிதத்தினை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Array

Array

இந்திய ஈக்விட்டிகள் தொடர்ந்து 20 மாத ஏற்றத்தில் உள்ளன. நவம்பர் 12 நிலவரப்படி சென்செக்ஸ் 127% அதிகரித்து, 60,686 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இதே போல நிஃப்டி 132% அதிகரித்துள்ளது. இதுதவிர 10 முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனை கவனியுங்கள்.

எனர்ஜி விலை அதிகரிப்பு

எனர்ஜி விலை அதிகரிப்பு

எரிபொருட்கள் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது ரூபாயின் வீழ்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவரும் இந்திய ரூபாயின் மதிப்பினால், இந்திய பங்குச்சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் சரிவினை ஏற்படுத்தலாம் என CLSA கூறுகின்றது.

பணவீக்கம் பற்றிய அச்சம்

பணவீக்கம் பற்றிய அச்சம்

அதிகரித்து வரும் விலைவாசி, மூலதன பொருட்கள் விலை, அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பலவும், நுகர்வோர் விலைக் குறியீடு, மொத்த விலைக் குறியீடு என இரண்டும் இரு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி விகிதம்

ரிசர்வ் வங்கியானது பல முறை தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தினை மாற்றம் செய்யாமல் உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தினையும் மாற்றம் செய்யாமல் உள்ளது. எனினும் தற்போது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதனால் இனி வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புராபிட் புக்கிங் செய்யலாம்

புராபிட் புக்கிங் செய்யலாம்

தொடர்ந்து பங்கு சந்தையானது உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள், மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையானது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய முதலீடுகள் விகிதம்

அன்னிய முதலீடுகள் விகிதம்

கடந்த ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் அன்னிய முதலீட்டு விகிதங்கள் அதிகம் இருந்து. ஆனால் தற்போது இந்த முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக சந்தையில் நடப்பு ஆண்டிலும் இனி இதற்கு மேலும் பெரியளவில் ஏற்றம் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது மட்டும் அல்ல இன்னும் பல காரணிகளும் சந்தைக்கு எதிரான உள்ள நிலையில், இது லாபத்தினை புக் செய்ய சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+