டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களில் பணிநீக்கம் என்பது சர்வசாதாரணமாகிவிட்டாலும், இதை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தற்போது நடக்கும் பணிநீக்கத்திற்கு முழுக்க முழுக்க நிர்வாகம் மட்டுமே காரணம், கொரோனா காலத்தில் லாக்டவுன் மூலம் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் டெக் மற்றும் டிஜிட்டல் சேவைகள் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், நேரமும், அளவும், அதற்காக செலவு செய்யும் தொகையும் அதிகமானது. இதை அடிப்படையாக வைத்து தான் அனைத்து முன்னணி டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் ஊழியர்கள் பணியில் சேர்த்தது.

ஆனால் கொரோனா-வுக்கு பின்பு இதை அனைத்தும் மாயமாகும் என்பதை நிர்வாகங்கள் கணிக்கவில்லை, இதன் வாயிலாக வர்த்தகத்தையும், வருமானத்தையும் இழந்த நிறுவனங்கள் தற்போது பணிநீக்கம் செய்து வருகிறது.
இதில் கூகுள், பேஸ்புக், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் துவங்கி சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் edtech நிறுவனமான Skill-Lync வரையில் அடக்கம். சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தில் கூட சிஇஓ-வை எதிர்த்து உயர் அதிகாரிகளுக்கு போனஸ் கொடுத்தது பெரும் பிரச்சனையாக மாறியது.
இந்த வரிசையில் 2K கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்கும் Clubhouse என்னும் ஆடியோ வாயிலான சமுக வலைத்தள நிறுவனத்தில் சுமார் 50 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. Clubhouse நிறுவனத்தின் நிறுவனர்களாக Paul Davison மற்றும் Rohan Seth ஆகியோர் ஊழியர்கள் அனுப்பிய ஈமெயிலில் நிறுவனம் முக்கிய இலக்குகளை கொண்டு சிறிய நிறுவனமாக இயங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Clubhouse நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு severance pay, பங்கிற்கு இணையான பணம், ஹெல்த்கேர் கவரேஜ், கரியர் அட்வைஸ், இமிகிரேஷன் சப்போர்ட் போன்றவை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள லேப்டாப்-ஐ தங்களுக்கே கொடுக்கவும் முடிவு செய்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான முழுமையான சம்பளமும் மாதம் கூடுதல் சம்பளத்தை severance pay ஆக கொடுக்க முடிவு செய்துள்ளது. பணிநீக்கத்திற்கு பின்பு சிறிய அணியை கொண்டு தீர்க்கமாக Clubhouse 2.0 திட்ட இலக்கை நோக்கி வேகமாக பயணிக்க உள்ளதாக Clubhouse நிறுவனத்தின் நிறுவனர்களாக Paul Davison மற்றும் Rohan Seth ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications