சென்னையின் அடையாளமாக அண்ணா நூலகம் எப்படி அமைந்திருக்கிறதோ அதேபோல திருச்சியின் அடையாளமாக மாறப்போகிறது காமராஜர் நூலகம்.சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் புதிதாக அமைய இருக்கும் நூலகத்திற்கு காமராஜரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி சென்னையில் ஏற்கனவே அண்ணா நூலகம் செயல்பட்டு வருகிறது. மதுரையில் இருக்கும் நூலகத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரும், கோவையில் உள்ள நூலகத்திற்கு பெரியார் பெயரும் சூட்டப்படும் என தெரிவித்த அவர், திருச்சியில் புதிதாக அமைய இருக்கும் நூலகத்திற்கு காமராஜரின் பெயர் சூட்டப்படும் என தெரிவித்தார். இந்த நூலக கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கலைஞர் கருணாநிதி பெயரால் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாட்டின் அறிவுக்களஞ்சியமாக இது இருக்கும் என்றும் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் உரையாற்றிய போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து திருச்சியில் 1, 97,337 சதுர அடி பரப்பளவில் ஏழு தளங்களுடன் நூலக கட்டடம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
235 கோடி ரூபாய் மதிப்பீட்டின் நூலக கட்டடம், புத்தகங்கள் மற்றும் மின்னணு புத்தகங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் , தொழில்நுட்ப சாதனங்களுக்காக 5 கோடி ரூபாய் என மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மாபெரும் நூலகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் தான் திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் அமைய இருக்கும் இந்த நூலகத்தை பொருத்தவரை வரவேற்பறை, தகவல் பகுதி, முக்கிய பிரமுகர்களுக்கான அறைகள், சொந்த புத்தகங்களை படிக்கும் பகுதி ,பத்திரிகைகள் மற்றும் வார இதழ்களுக்கான அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 1000 இருக்கைகள் கொண்ட ஒரு கலையரங்கமும் இந்த நூலகத்தில் இடம்பெறும்.
7 தளங்களும் பிரத்தியேகமான முறையில் திட்டமிடப்பட்டுள்ளன . முதல் தளத்தில் அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் திரையரங்கம் இடம்பெறும். இரண்டாவது தளத்தில் பல்நோக்கு கூட ஆராய்ச்சி மையம், பயிலரங்கம், கலைஞர் பகுதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தளம் முழுக்க முழுக்க தமிழ் நூலகமாக செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காவது தளத்தில் ரோபோட்டிக்ஸ் மற்றும் விளையாட்டு பகுதி, டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் பகுதி இடம் பெறும். ஐந்தாவது தளத்தில் அறிவு சார்ந்த மையம். செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆறாம் தளத்தில் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, டிஜிட்டல் ஸ்டுடியோ, போட்டி தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடம் இடம் பெறும் . ஏழாம் தளத்தில் காணொலி காட்சி அரங்கம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications