தூத்துக்குடி: இந்தியாவிலேயே கார் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இல்லாத கார் உற்பத்தியாளர்களே இல்லை எனக் கூறும் அளவுக்கு பல்வேறு பெரிய நிறுவனங்களும் தங்களின் கார் உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கின்றன. இந்த வளர்ச்சி மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாக வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.
வின்பாஸ்ட் கார் உற்பத்தி ஆலை: வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 1.50 லட்சம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் வகையில் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பது என தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. துறைமுகம் அருகிலேயே இருப்பதால் கார் ஏற்றுமதி இறக்குமதிக்கு சிறந்த இடமாக தூத்துக்குடி இருக்கும் என வின்பாஸ்ட் நிறுவனம் இங்கே ஆலையை அமைத்துள்ளது.

முதலமைச்சர் திறந்து வைத்தார்: கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆலைக்கான அடிக்கல்லை நாட்டினார். முதல் கட்டமாக 1119 கோடி ரூபாய் செலவில் 114 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனம் தன்னுடைய கார் உற்பத்தி ஆலையை கட்டி முடித்துள்ளது. இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை திறந்து வைத்தார்.
முதல் காரில் கையெழுத்து: தூத்துக்குடிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் வின்பாஸ்ட் நிறுவனம் இந்த ஆலையில் தயாரித்த முதல் காரில் தன்னுடைய கையெழுத்தையிட்டு கார் விற்பனையையும் தொடங்கி வைத்தார். முன்னதாக பேட்டரி வாகனம் மூலம் கார் உற்பத்தி ஆலையை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார் . தற்போதைக்கு இங்கே இரண்டு பணிமனைகள் , இரண்டு கிடங்குகள் மற்றும் கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கின்றன .

எலக்ட்ரிக் கார் உற்பத்தி முன்னணி: இங்கே முதல் கட்டமாக VF6, VF7 ஆகிய கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் முதலமைச்சர் இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டியிருந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்குள் கட்டுமான பணி முடிந்து ஆலையே திறக்கப்பட்டுவிட்டது. முன்னதாக இந்த ஆலை திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களில் 40% தமிழ்நாட்டில் தான் உற்பத்தி ஆகிறது என பெருமிதம் தெரிவித்தார்.
தூத்துக்குடி, நெல்லை வளர்ச்சி பெறும்: நான் அடிக்கல் காட்டி 17 மாதங்களில் தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் தொடங்கி பெருமை சேர்த்துள்ளனர் என்று பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மட்டும் இன்றி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொழில் பகுதியாக உருவாகும் என்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்தவர்களுக்கு இந்த ஆலையில் வேலை கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு: ஏற்கனவே தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த நான் முதல்வன் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற 200 பேருக்கு இந்த ஆலையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் கூடுதலாக 3,500 வேலைவாய்ப்புகள் இங்கே உருவாக இருக்கின்றன. இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் விற்பனை நிலையத்தை தொடங்கி இருக்கும் நிலையில் வின்பாஸ்ட் அத்துடன் போட்டியிட ஏதுவாக தூத்துக்குடி ஆலை அமைந்துள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications