சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒரு திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக இவர்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைக்கு செல்வதில் சிரமம்: தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பங்களில் ரேஷனில் வாங்க கூடிய அரிசி, பருப்பு உள்ளிட்டவைதான் அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது . மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடைக்கு சென்று காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு வருவதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்காக அவர்கள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டி இருக்கிறது.

தாயுமானவர் திட்டம்: இந்த சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தாயுமானவர் திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது . கூட்டுறவுத்துறை சார்பாக தமிழ்நாட்டை சேர்ந்த வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வது தான் தாயுமானவர் திட்டம்.
இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு திட்டம் என அவர் கூறியிருக்கிறார் .அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பதில் இந்தியாவிலேயே முன்மாதிரி முயற்சி என குறிப்பிட்டு இருக்கிறார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடையில் சென்று பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை உணர்ந்து இந்த திட்டத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

யாரெல்லாம் பயன் பெறலாம்: தமிழ்நாட்டில் 21.70 லட்சம் பேர் இந்த திட்டம் மூலம் ரேஷன் பொருட்களை நேரடியாக தங்கள் வீட்டிலேயே டெலிவரி பெற இருக்கின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த 34 , 809 ரேஷன் கடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட 20,42,657 மூத்த குடிமக்களும், 1,27, 797 மாற்று திறனாளிகளும் என மொத்தமாக 21, 70, 454 பேர் பயனடைய இருக்கின்றனர். ரேஷன் அட்டையில் இருப்பவர்களின் விவரங்களை வைத்து அரசே இவர்களை அடையாளம் கண்டுவிட்டது.
திட்டம் எப்படி செயல்படும்: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடையே இவர்களின் வீடு தேடி வந்துவிடும். அதாவது கூட்டுறவு துறை சார்பாக ஒரு வாகனத்தில் ரேஷன் கடையில் இருக்கும் அரிசி ,பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் எடை போடும் இயந்திரம் , பிஓஎஸ் கருவி ஆகியவற்றுடன் ஊழியர்கள் வீட்டிற்கே வருகை தருவார்கள்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோரின் ரேஷன் கார்டை பெற்று கைரேகை பெற்று அவர்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த திட்டத்திற்காக அரசுக்கு 30 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications