ஜெர்மனி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணம் தமிழ்நாட்டுக்கு 7000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய ஜெர்மனி பயணத்தின் ஒரு பகுதியாக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் தொழிலதிபர்களுடனான சந்திப்பு என பிஸியாகவே இருந்தார்.
முதலமைச்சர் ஜெர்மனி பயணம்: இந்த மாநாடு மற்றும் சந்திப்புகளின் மூலம் தமிழ்நாட்டுக்கு 15,320 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 26 நிறுவனங்களோடு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது . மொத்தம் 7020 கோடி ரூபாய் மதிப்பான முதலீட்டினை ஈர்த்திருப்பதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிடுகிறது.

முதலீட்டாளர் மாநாடு: செப்டம்பர் 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு ரைசிங் என்ற பெயரில் ஒரு முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கொண்ட ஒரு மாநிலம் எனக் குறிப்பிட்ட அவர், ஜெர்மனி நாட்டவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை கற்று இந்தியாவிலேயே முதன்முதலாக பைபிளை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டு இருக்கிறார்கள் என பெருமிதம் தெரிவித்தார்.
முதலீடு செய்ய அழைப்பு: ஏற்கனவே ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ , மெர்சிடிஸ் பென்ஸ் , டெல்காம் போன்ற பல்வேறு பார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன என குறிப்பிட்ட அவர் 60க்கும் மேற்பட்ட ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் நம்பிக்கையோடு தமிழ்நாட்டில் கால் பதித்து வெற்றி பெற்றுள்ளன என கூறினார். இந்த பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் அப்போது அழைப்பு விடுத்தார்.

மொத்தம் 26 ஒப்பந்தங்கள் கையெழுத்து: தமிழ்நாடு தான் இந்தியாவின் ஜெர்மனி என குறிப்பிட்ட ஸ்டாலின், Made in Germany எப்படி தரத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் பார்க்கிறார்களோ அப்படி Made in Tamilnadu என்பதும் தரமும் திறனும் கொண்ட ஒரு பெயராக உருவாகிக் கொண்டிருக்கிறது என்றார். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3,819 கோடி ரூபாய் மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
என்னென்ன நிறுவனங்கள் முதலீடு: இது தவிர மேலும் 3 நிறுவனங்களோடு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் நார் பிரெம்ஸ் என்ற நிறுவனம் 2000 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 3500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் , நோர்டெக்ஸ் குழுமம் 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது இது 2500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும், ஈபிஎம் பாப்ஸ்ட் என்ற நிறுவனம் 201 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
எவ்வளவு வேலைவாய்ப்பு: எனவே மொத்தமாக முதலமைச்சரின் இந்த ஜெர்மனி பயணம் மூலம் தமிழ்நாட்டிற்கு 7,020 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 15,320 வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வென்சிஸ் எனர்ஜி என்ற நிறுவனம் 1068 கோடியை முதலீடு செய்ய கையெழுத்திட்டுள்ளது. பிஏஎஸ்எஃப் நிறுவனம் பெல்லா பிரீமியர் , மாஷ் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களும் பல நூறு கோடிகளை முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications