சென்னை: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு என பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் 12ஆம் தேதியிலிருந்து புதிதாக ஒரு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.
முதலமைச்சர் அறிவிப்பு: இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கு சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி வைக்கிறேன் என கூறியிருக்கிறார். இதன்படி வரும் செவ்வாய்க்கிழமை முதல் தமிழ்நாட்டை சேர்ந்த வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் அவர்களின் இல்லத்திற்கே சென்று சேர இருக்கிறது.

ரேஷன் பொருள் வாங்க அலைய வேண்டாம்: வயது முதிர்ந்தோரும் மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் பொருட்களை வாங்க மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு செல்ல கடும் சிரமப்படுகின்றனர். இதற்காக மற்றவர்களை நாடும் சூழலும் இருக்கிறது. ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வரும்:இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த 16, 73 ,333 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தினால் 21, 70, 454 பேர் பயன்பெற இருக்கின்றனர் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார். இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வாகனத்தில் ரேஷன் பொருட்கள், எடை போடும் இயந்திரம் பிஓஎஸ் கருவி ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரின் வீடுகளுக்கு சென்று பொருட்களை விநியோகம் செய்வார்கள்.
தாயுமானவர் திட்டம்: வரும் செவ்வாய்க்கிழமை சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். எனவே வரும் செவ்வாய்க்கிழமை முதல் தமிழ்நாட்டை சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் தங்களுடைய ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு சென்று அலைய வேண்டிய தேவையோ வரிசையில் காத்திருந்து சிரமப்பட வேண்டிய தேவையோ இல்லை.
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்:செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்படும் தாயுமானவர் திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ரேஷன் பொருட்கள் அவர்களின் வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இந்த திட்டம், சோதனை செய்து பார்க்கப்பட்டு தற்போது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications