மாஸ் காட்டும் விஜய்.. 74.1% வெற்றி முதலீடு.. 200 நாளில் ரூ.1.73 லட்சம் கோடி..!

தமிழ்நாடு அரசின் 2வது வெற்றி தமிழ்நாடு முதலீடு மாநாடு துவங்கியுள்ள நிலையில் முதல் நிறுவனமாக ஈமாமி அக்ரோ டெக் நிறுவனம் சுமாக் 1380 கோடி ரூபாய் முதலீட்டில் விருதுநகர் மாவட்டத்தில் கம்பிரஸ்டு பயோகேஸ் திட்டத்தை செயல்படுத்தத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் முதல்வர் விஜய் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா முன்னிலையில் நடந்தது. இந்த 1380 கோடி ரூபாய் முதலீட்டின் வாயிலாக 1711 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

மாஸ் காட்டும் விஜய்.. 74.1% வெற்றி முதலீடு.. 200 நாளில் ரூ.1.73 லட்சம் கோடி..!

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்து இன்றுடன் 199 நாட்கள் ஆன நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் 1.73 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீட்டு உத்தரவாதங்களை பெறப்பட்டு உள்ளதாக கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த முதலீட்டின் வாயிலாக சுமார் 1.98 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமாக மே 2026 முதல் இதுவரை சுமார் 112 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் இதில் 83 ஒப்பந்தங்கள் அடுத்தகட்டத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உண்மையான முதலீடாக மாறிய விகிதம் அதாவது Conversion rate 74.1 சதவீதமாக உள்ளது என கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பு தெரிவித்துள்ளது.

தொழிற்துறை அமைச்சராக கீர்த்தனா அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் முதலீட்டு ஒப்பந்தங்கள் அனைத்தையும் உண்மையான முதலீடாக மாறுவதே எங்கள் அரசின் இலக்கு எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் போலியாக அதிக முதலீட்டை ஈர்த்தாக காட்டுவதற்கு ஒப்பந்தங்கள் செய்யமாட்டோம், 100 சதவீதம் கன்வெர்ஷன் ரேட் காட்டுவோம் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நடக்கும் Vettri Tamil Nadu Investment & Conversion Conclave 2026 மாநாட்டில் சுமார் 78 ஒப்பந்தங்கள் கையெழுத்திட உள்ளன. இதன் வாயிலாக ரூ.58,214 கோடி புதிய முதலீடுகளும், 65,786 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கு மத்தியில் புதிய முதலீட்டை ஈர்ப்பதில் பெரும் போட்டி இருந்து வரும் வேளையில் விஜய் தலைமையிலான அரசின் 2வது முதலீட்டாளர் மாநாடு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்பில் பதிவு செய்யப்பட்ட வெற்றிக்கு பெரும் முக்கிய காரணமாக இருந்த கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பில் இருந்து 15க்கும் அதிகாரிகள் வெளியேறிய நிலையிலும், இதில் பலர் பிற தென்னிந்திய அரசுகளின் முதலீட்டு ஈர்ப்பு அமைப்பிலும் சேர்ந்துள்ளது பெரும் சர்ச்சையாகியிருக்கும் வேளையில் 58,214 கோடி ரூபாய் அளவிலான புதிய முதலீட்டு ஈர்க்கும் மாநாடு தமிழ்நாடுக்கு புதிய உந்துசக்தியாக அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+