முதலமைச்சர் விஜய் தரும் ரூ.1 லட்சம் பரிசு!! ஒரே அறிவிப்பில் அரசு அதிகாரிகளுக்கு செக் வைத்த அரசு!!

தமிழ்நாட்டில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் திமுக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவு தந்தன. இதனை அடுத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். சட்டமன்றத்திலும் பெரும்பான்மையை நிரூபித்தார். முதலமைச்சராக பதவியேற்ற உடனே சிங்கப்பெண் படை உருவாக்கம், மின்சார கட்டணத்தில் 200 யூனிட் வரை இலவசம் என முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

முதலமைச்சர் விஜய் தரும் ரூ.1 லட்சம் பரிசு!! ஒரே அறிவிப்பில் அரசு அதிகாரிகளுக்கு செக் வைத்த அரசு!!

திமுகவின் புதுமை பெண், தமிழ் புதல்வன், மகளிர் உரிமை தொகை திட்டங்களும் தொடர்வதாக கூறினார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தன்னுடைய தேர்தல் பரப்புரையிலும் அவர் லஞ்ச ஒழிப்பு குறித்த வாக்குறுதி தந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டதாக சில ஊடங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. அதில் எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம், புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க 1800 425 1555 (24x7 கட்டணமில்லா எண்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

சிறிய குழாய் இணைப்பு, சான்றிதழ் பெறுவது என பல வேலைகளுக்கும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்றால் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பு சாமனிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும்.

அதே வேளையில் பொதுமக்களும் இனி அச்சப்படாமல் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்து புகார் கூறும் நம்பிக்கை உண்டாகும். ஆனால் வேண்டுமென்றே ஊடக வெளிச்சம், இன்ஸ்டா ரீல்ஸ் பெற இதனை தவறாக பயன்படுத்துவோருக்கு சட்ட சிக்கல் உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+