சென்னை தான் வேணும்.. அடம்பிடித்து ஓடி வந்த அமெரிக்காவின் Starbucks.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய கூட்டம்

இந்தியாவில் அதிக ஜிசிசி நிறுவனங்களை ஈர்க்கும் நகரங்களில், தொடர்ந்து டாப் 5 இடங்களில் இருந்து வரும் சென்னையில் புதிதாக ஒரு அமெரிக்க நிறுவனம் ஜிசிசி அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனம், சென்னையில் ஜிசிசி எனப்படும் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க உள்ளது. இந்திய டெக் துறையில் தற்போது ஜிசிசி நிறுவனங்கள் தான் மிகவும் முக்கியமான வர்த்தக பிரிவாக இருந்து வருகிறது, ஸ்டார்ட்அப்-க்கு இணையாகவும், ஐடி சேவைத் துறையின் இடத்தை பிடிக்கும் அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகிறது ஜிசிசி நிறுவனங்கள்.

சென்னை தான் வேணும்.. அடம்பிடித்து ஓடி வந்த அமெரிக்காவின் Starbucks.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய கூட்டம்

இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சாப்பில் கைடென்ஸ் தமிழ்நாடு மற்றும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மத்தியில் சென்னையில் தனது ஜிசிசி அலுவலகத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Also Read

இந்த GCC அலுவலகம் மூலம் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சுமார் 800 டெக் நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த ஜிசிசி அலுவலகம் மூலம் ஸ்டார்பக்ஸ் தனது உலகளாவிய செயல்பாடுகளுக்கான டெக் சேவைகளை உருவாக்கும், ஒருங்கிணைக்கும் அலுவலகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் தனது ரீடைல் காஃபி வர்த்தகத்தை டாடா குழுமத்துடன் இணைந்து நடத்தினாலும், இந்த ஜிசிசி அலுவலகம் முழுக்க முழுக்க ஸ்டார்பக்ஸ் அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும்.

டெக் நிறுவனங்கள் பொறுத்த வரையில், திறன் வாய்ந்த ஊழியர்கள் அதிகம் கிடைக்கும் பகுதியில் தான் தனகு GCC அலுவலகத்தை அமைத்து வருகிறது. அந்த வரிசையில் சென்னை தொடர்ந்து இந்திய அளவில் டாப் 5 இடங்களில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முழுவதும் தற்போது உலகளவிலான 2117 நிறுவனங்கள் சுமார் 3,728 ஜிசிசி அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

சென்னை தான் வேணும்.. அடம்பிடித்து ஓடி வந்த அமெரிக்காவின் Starbucks.. விஜய் அலுவலகத்தில் நடந்த முக்கிய கூட்டம்

இந்த நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்-களுக்கு இணையாக அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த அலுவலகத்தில் சுமார் 23.6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர், இதேபோல் வருடத்திற்கு 98.4 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

இதில் கிட்டத்தட்ட 29 சதவீதம் ஜிசிசி அலுவலகம் பெங்களூரில் மட்டுமே உள்ளது, ஹைதராபாத்தில் 515 அலுவலகங்களும், மும்பையில் 375 அலுவலகங்களும், புனேயில் 475 அலுவலகங்களும், என்சிஆர் பகுதியில் 490 அலுவலகங்களும், சென்னையில் 405 அலுவலகங்களும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+