நம் நாட்டின் தூண்களாக இருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டாலும் மகத்தான வெற்றியோடு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். புதிய ஆட்சி மாற்றம் வந்ததுமே மக்கள் மத்தியில் அவ்வளவு எதிர்பார்ப்புகள். அதிலும் குறிப்பாக டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். இந்நிலையில் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு இன்று ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க முதல்வர் விஜய் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் தங்கள் தேர்தல் பரப்புரையிலேயே விவசாய கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்தது. அதோடு அனைத்து விவசாயிகளின் கடனும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தின் நிதி நலனைக் கருத்தில் கொண்டு பகுதி பகுதியாக பிரித்து தள்ளுபடி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு தள்ளுபடி?: குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு வெவ்வேறு தள்ளுபடி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரூ. 50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழு கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான குறு விவசாயிகள் கடன் சுமையிலிருந்து விடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சிறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான கடன்களுக்கு 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 50,000 கடன் வாங்கியிருந்தால் சிறு விவசாயிகள் அதிகபட்சமாக ரூ.25,000 வரை தள்ளுபடி பெறுவார்கள்.

ரூ. 50,000 முதல் ரூ.60,000 வரை கடன் வாங்கிய குறு விவசாயிகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி, சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி. ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை கடன் வாங்கிய குறு விவசாயிகளுக்கு ரூ.30,000 தள்ளுபடி, சிறு விவசாயிகளுக்கு ரூ.15,000 தள்ளுபடி. ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி, சிறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி.
ரூ.80,000 முதல் ரூ.90,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி, சிறு விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி. ரூ.90,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி, சிறு விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி. 1 லட்சத்திற்கு மேல் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற பெரு விவசாயிகளுக்கும் ரூ.5000 தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications