முதல்வர் விஜய் நாளை கரூர் செல்லவிருக்கும் நிலையில், பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக நாளை காலையில் முதலமைச்சர் விஜய் நாளை ரோட் ஷோ செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தேர்தலுக்கு முன்பு விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு, 41 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களும் அடங்குவர், இக்கூட்டத்தில் பலியானர்களின் குடும்பத்தை சென்னைக்கு அழைத்து விஜய் சந்தித்தது மட்டும் அல்லாமல் பலியானோருக்கு தலா 20 லட்சம் தவெக கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது, தமிழ்நாடு அரசு 10 லட்சம் கொடுத்தது.

இந்த சம்பவத்திற்கு பின்பு முதல் முறையாக முதல்வராக பதவியேற்றிய பின்னர் விஜய் கரூர்-க்கு வருகிறார். நாளை காலை 9.30 மணிக்கு வரும் முதல்வர் விஜய் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள உள்ளார்.
முதல்வர் விஜய்யின் இந்த கரூர் பயணத்தில், முதலும் முக்கிய நிகழ்ச்சியாக கரூர் அடுத்த வெண்ணைமலை அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெறக் கூடிய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் 1 மணிக்குள்ளாக அந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.
விஜய்-யின் கரூர் ரோட் ஷோ
அட்லஸ் கலையரங்க மைதானம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மத்தியிலான இடைப்பட்ட தூரத்தில் செல்லும் வழியாக திருக்காம்புலியூர் ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா, உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர் ரவுண்டானா, டோல் கேட், தாந்தோன்றிமலை வழியாக சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முதல்வர் ரோடு சோர்ஸ் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் முந்தைய சம்பவம் போல் எதுவும் நடக்க கூடாது என்பதற்காக சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகளானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் ஊழியர்கள் மும்பரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக முதல்வர் விஜய் கரூர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 6700க்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
32 பேருக்கு ஸ்பெஷல் அறிவிப்பு!
மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு தமிழ்நாடு அரசு கருணை அடிப்படையில் அரசு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணை நாளை விஜய் தனது கைப்பட வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதோடு கரூர் பகுதியில் அரசு வேலை பெற்றோர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள் முதல்வர் விஜய்.


Click it and Unblock the Notifications