சென்னை: தமிழ்நாட்டு முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடந்த 2வது அமைச்சரவை கூட்டத்தில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய ஒப்புல் அளிக்கப்பட்டு உள்ளது உடன் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதை தாண்டி மாநிலத்தின் தொழிற்துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் உள்நாட்டு MSME துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் முன்னுரிமை வழங்கும் வகையில் முக்கியமான முடிவை எடுத்துள்ளார் விஜய்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை 360 டிகிரியிலும் மேம்படுத்த புதிய திட்டங்கள் வகுக்க விஜய் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக MSME துறையை மேம்படுத்துவதக்கான ஆலோசர்களை தேர்வு செய்ய தமிழக அரது டெண்டர் வெளியிட்டுள்ளது.
விஜய் தலைமையில் ஜூலை 2-22 வரையிலான காலக்கட்டத்தில் MSME துறை சார்ந்து பல்வேரு ஆய்வு கூட்டங்களை நடத்தினார், இதன் விளைவாக புதிய திட்டங்களை வகுக்க ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக MSME நிறுவனங்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இத்துறையின் செயல்திறன், உற்பத்தி திறன் குறைந்துள்ளது. ஒருபக்கம் உலகம் முழுவதும் குறைந்த நுகர்வு, மறுபுறம் மின்வெட்டு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு என உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்நிலைகள் இந்திய MSME துறையில் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இதன் காரணமாக பிற மாநிலங்களின் MSME துறையின் அவுட்புட் அதிகரித்துள்ளது, இந்த நிலையை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற இத்துறை வளர்ச்சிக்காக பாலிசி அட்வைசரிகளை நியமிக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் விரைவில் உணவு பதப்படுத்தும் தொழில், மின்னணு (Electronics) துறை, தோல் தொழில், ஜவுளித் துறை, ஆட்டோமொபைல் துறை, மின்சார வாகன (EV) துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) துறைகள் வேகமாக வளர்ச்சி அடையும்.
இதேபோல் தமிழ்நாடு MSME நிறுவனங்கள் இதுவரையில் நுழையாத அல்லது அதிகம் கண்டுக்கொள்ளாத துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் கொள்கைகள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுநாள் வரையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிகப்படியான கவனம் செலுத்தி வந்த தமிழ்நாடு அரசு தற்போது திடீரென MSME நிறுவனங்களின் பக்கம் ரூட்டை மாற்றியுள்ளார் விஜய்.


Click it and Unblock the Notifications