சென்னை நகரில் மேம்பாட்டு பணிகளை பார்வையிட சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் செயல்படுகிறது. சென்னை நகருக்கான திட்டமிடல் தொடங்கி அனைத்து வகையான மேம்பாட்டு பணிகளையும் இந்த அமைப்பு தான் மேற்கொள்கிறது.
சென்னையை போலவே தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கும் மேம்பாட்டு ஆணையங்களை அமைப்பதற்கு மாநில வீட்டு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்மொழிவை அரசு ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. எனவே இந்த அமைப்புகளை ஏற்படுத்துவதில் இருக்கும் அமைப்பு ரீதியான இடைவெளிகளை சரி செய்யும் பணிகளை டிடிசிபி எனப்படும் மாநில நகர மற்றும் கிராம திட்டமிடல் துறை கையில் எடுத்திருக்கிறது.

இது தொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டு துறை அதிகாரிகள் அளித்துள்ள பேட்டியில், டிடிசிபிஐ வலுப்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்போது டிடிசிபியின் செயல்பாடுகள் என்னென்ன , அதனை எப்படி வலுப்படுத்த வேண்டும் அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.
ஏற்கனவே மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஓசூர் ஆகிய நான்கு நகரங்களுக்கும் தனியாக மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படும் என 2021- 22 ஆம் பட்ஜெட்டிலேயே தமிழக அரசு அறிவித்தது. பின்னர் இந்த பட்டியலில் திருச்சி மற்றும் சேலம் ஆகிய நகரங்களும் சேர்க்கப்பட்டன. முன்னதாகவே கோயம்புத்தூர், ஓசூர் மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு நகரங்களுக்கு மேம்பாட்டு ஆணையங்களை அமைப்பதற்கான ஆணைகளை அரசு வெளியிட்டு விட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தற்போது பல்வேறு நகரங்களும் வேகமாக நகர்புறமாகி வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் அரசு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தினாலும் அதனை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் நீடித்த நிலை தன்மை கொண்டவையாகவும் மாற்ற வேண்டிய சவால் அரசுக்கு இருக்கிறது.
இதன் காரணமாகவே அரசு ஒவ்வொரு நகரத்திற்கும் என தனித்தனியாக மேம்பாட்டு ஆணையங்களை அமைக்க முடிவு செய்திருக்கிறதாம். இதற்காக ஒரு ஆலோசனை அமைப்பிடம் ஆய்வறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு அறிக்கையானது இந்த மேம்பாட்டு ஆணையங்களின் கட்டமைப்பு எப்படி இருக்கும், அதில் மனித வள மனித வளத்தை எப்படி பயன்படுத்துவது, நிதியை எப்படி கொண்டு வருவது என்பன உள்ளிட்டவை இடம்பெறுமாம். தமிழ்நாடு அரசு இதற்காகவே தமிழ்நாடு நகர மற்றும் கிராமப்புற திட்டமிடல் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications