திருமழிசை: சென்னையின் துணை நகரமாக திருமழிசையை உருவாக்குவதற்கான நடவடிக்கையை சிஎம்டிஏ தீவிரப்படுத்தி உள்ளது. சென்னையில் தொழில் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில் மக்கள் தொகை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் சென்னைக்கு துணை நகரங்களாக அருகில் இருக்கக்கூடிய திருமழிசை, மாமல்லபுரம் உள்ளிட்ட நகரங்களை உருவாக்க வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருமழிசையில் புது நகரை அமைக்கும் திட்டப்பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் நவீன உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தும் விதமாக சிஎம்டிஏ அதிகாரிகள் 1605 ஏக்கர் நிலத்தை நிலத்தொகுப்பு திட்டத்தின் மூலம் கையகப்படுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பூந்தமல்லி அருகே திருழிசையில் 17 கிராமங்களை உள்ளடக்கிய 34.10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதுநகர் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த புதுநகர் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கு முன்பெல்லாம் அரசு மக்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தி அவர்களுக்கு ஒரு தொகையை வழங்கிவிடும். ஆனால் தற்போது நிலத்தொகுப்பு என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மக்களிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதில் குறிப்பிட்ட விகிதம் பொது பயன்பாட்டிற்காகவும் மீதமுள்ள இடம் நவீன முறையில் மேம்படுத்தப்பட்டு மீண்டும் அந்த மக்களிடமே ஒப்படைக்கப்படும்.
இதற்காக திருமழிசையில் ஏழு இடங்களில் நிலங்களை எடுக்க இருப்பதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் லூப் சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன . 30 மீட்டர் அகலம் கொண்டதாக இந்த லூப் சாலை இருக்கும் என கூறப்படுகிறது.
பல்வேறு நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களை தொடங்குவதற்கு ஏதுவான இடங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இந்த பகுதியில் பணியாற்றும் மக்களுக்கு ஏற்ற வகையில் குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. மிகப் பெரிய அளவில் நடைபெப்பாதை, திரைப்பட நகரம் மற்றும் தொழில் பூங்காக்கள் ஆகியவை இங்கே கொண்டுவரப்பட இருக்கின்றன .
மக்களிடம் இருந்து நிலத்தொகுப்பு திட்டத்தின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலமானது சாலை பயன்பாட்டிற்கு 10 சதவீதம், குடியிருப்பு பயன்பாட்டிற்கு 41 சதவீதம், வணிகப் பயன்பாட்டிற்கு 20 சதவீதம், ஓய்வு பூங்காக்கள் மற்றும் நீர்நிலை பயன்பாட்டிற்கு 16 சதவீதம் என பிரிக்கப்பட உள்ளன.
கோலப்பஞ்சேரி, காவலாச்சேரி, உடையவர் கோவில், திருமழிசை, குத்தம்பாக்கம், பழஞ்சூர், வரதராஜபுரம், தூக்கணாம்பட்டு ஆகிய கிராமங்களில் தற்போது நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நிலங்களின் உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படும், பின்னர் அவை மதிப்பு கூட்டப்பட்ட மனைகளாக மாற்றம் செய்யப்பட்டு உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிலங்களில் 60% மனைகளாக அவர்களுக்கே திரும்ப வழங்கப்படும் என சி எம் டி ஏ தெரிவித்துள்ளது.
எனவே இது நில உரிமையாளர்களுக்கும் அதனை வாங்குபவர்களுக்கும் பயன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இப்போது திருமழிசையில் கட்டப்படக்கூடிய லூப் சாலையானது சென்னை அவுட்டர் ரிங் சாலையுடன் இணைக்கப்பட இருக்கிறது இதனால் போக்குவரத்து மிக எளிதாகிவிடும்.
Story Written by: Devika
More From GoodReturns

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications