ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் புதுமையைப் படைக்க போகிறோம் என்ற முக்கிய இலக்குடன் வந்த நத்திங் நிறுவனம் பெரிய வர்த்தகத்தைக் கைப்பற்ற முடியாத நிலையில், பிற சீன நிறுவனங்களைப் போலவே மலிவு விலையில் பொருட்களை விற்கும் மற்றொரு பிராண்டை உருவாக்கியது. இதன் பெயர் CMF.
நத்திங் நிறுவனத்தைப் போலவே CMF பிராண்டும் புதுமையான டிசைன் உடன் சந்தையில் களமிறங்கி இளம் தலைமுறையினரை ஈர்க்கும் முயற்சியில் உள்ளது. இந்த நிலையில் CMF பிராண்டின் கீழ் வரவுள்ள புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை ஜூலை 8ஆம் தேதி இந்தியா மற்றும் உலக சந்தைகளில் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்தது.

இந்த நிலையில் CMF பிராண்டின் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே இதன் விலை கசிந்துள்ளது. CMF Phone 1 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலையையும் தற்போது வெளியாகியுள்ள விலையும் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இப்போதெல்லாம் ஸ்மார்ட்போனில் நம்மால் எதையும் கழட்டி மாற்ற முடியாது ஆனால் CMF Phone 1 ஸ்மார்ட்போனின் பின்புறம் சுழலும் ஸ்க்ரூ இருப்பதை நத்திங் நிறுவனம் உறுதி செய்திருந்தது. இதன் மூலம், மக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பேக் கவரை மாற்றிக் கொள்ளும் வசதியை நிறுவனம் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தான் இந்த ஸ்க்ரூ பயன்படும்.
தற்போது கசிந்துள்ள தகவல்களின் படி, 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட CMF Phone 1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 ஆக இருக்கக்கூடும். மேலும், 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விலை ரூ.17,999 ஆக இருக்கும் எனத் தகவல். இருப்பினும், இந்த விலைகள் அனைத்து வங்கி தள்ளுபடிகளையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் கடந்த சில வருடங்களாக அதிகப்படியான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை வேண்டுமென்ற கசியவிட்டுக் குறைவான விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யும் மார்கெட்டிங் உக்தியை பயன்படுத்தி வருகிறது. இது ஆப்பிள் ஐபோன் அறிமுகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய உத்தியாக இருந்தாலும், தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பயன்படுத்துகிறது.
குட்ரிட்டன்ஸ் கணிப்பின் படி இந்த CMF Phone 1 ஸ்மார்ட்போனின் விலை கசிந்துள்ள விலையை காட்டிலும் குறைவான விலைக்கே அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு அதிகம். ஜூலை 8ஆம் தேதி நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரையில் காத்திருப்போம்.

CMF Phone 1 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் முழு விவரங்கள்:
* 6.7-இன்ச் புல் HD+ LTPS AMOLED டிஸ்ப்ளே (2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz வரை வேரியபிள் ரிஃப்ரெஷ் ரேட்)
* IP52 ரேட்டிங் உடன் ஸ்ப்ளாஷ் மற்றும் தூசி எதிர்ப்பு திறன் இருக்கும்.
* இன்-டிஸ்ப்ளே பின்ங்கர் பிரின்ட் சென்சார்
* மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட்
* 8GB வரையிலான ரேம் மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ்
* 2TB வரையிலான மைக்ரோ SD கார்டு விரிவாக்கம்
* 50MP பிரைமரி கேமரா மற்றும் டெப்த் சென்சார்
* 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
* ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Nothing OS 2.5 (2 ஆண்டுகள் OS அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும்)
இந்தத் தகவல்கள் அனைத்தும் கசிந்த தகவல்களாக இருந்தாலும், இதுவரை வெளியாகியுள்ள விவரங்கள் நம்பகத்தகுந்தவையாக உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் பெரும்பாலான விவரங்கள் இதற்கு ஒத்துப்போகவே அதிக வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications