ஆடியில் நல்ல சேதி சொன்ன CMIE.. தமிழகத்தில் குறைந்த வேலையின்மை விகிதம்.. இந்தியாவில் என்ன நிலவரம்..!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் அதே நேரத்தில், கடந்த சில மாதங்களாக சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக வேலையின்மை விகிதமானது குறைந்து வருகின்றது.

இது சொல்லப்போனால் வேலை வாய்ப்பு விகிதமானது அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து முந்தைய சில மாதங்களாகவே வேலையின்மை அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது மிக நல்ல விஷயம் எனலாம்.

இது இனி வரவிருக்கும் மாதங்களிலும் வேலையின்மை விகிதம் இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் என்ன நிலவரம்

தமிழகத்தில் என்ன நிலவரம்

கடந்த ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதமானது தமிழகத்தில் 4.8% ஆக குறைந்துள்ளதாக சி.எம்.ஐ.இ கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

இதே கடந்த ஜூன் மாதத்தில் தமிழ் நாட்டின் வேலை வாய்ப்பின்மை விகிதம் 8.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்தியாவின் ஒட்டுமொத்த வேலை வாய்ப்பின்மை விகிதமும் ஜூலை மாதத்தில் 9.17%ல் இருந்து 6.95% ஆக குறைந்துள்ளது.

நகர்புற வேலைவாய்ப்பின்மை

நகர்புற வேலைவாய்ப்பின்மை

குறிப்பாக இந்தியாவில் நகர்புற வேலை வாய்ப்பின்மை விகிதமானது, 8.30% ஆகவும், கிராமப்புற வேலை வாய்ப்பின்மை விகிதமானது 6.34% ஆகவும் குறைந்துள்ளது. லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தல் தொடங்கிய நிலையில், பணியமர்த்தல் விகிதமானது படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சந்தையில் வேலையின்மை விகிதமானது குறையத் தொடங்கியுள்ளது.

4 மாதத்தில் இல்லாத அளவு சரிவு

4 மாதத்தில் இல்லாத அளவு சரிவு

இது நல்ல விஷயமாகவே பார்க்கப்பட்டாலும், தொடர்ந்து இந்த விகிதமானது அப்படியே தொடருமா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. இது சந்தையில் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கான செயல்பாடுகள் அதிகரிக்கும்போது தான் சந்தை ஏற்றம் காண தொடங்கலாம்.

எப்படியிருப்பினும் ஜூலை மாத வேலையின்மை விகிதமானது 4 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ள சந்தையில், மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஓரளவு வளர்ச்சி

ஓரளவு வளர்ச்சி

இது கொரோனாவின் இரண்டாவது அலைக்கு மத்தியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில், வேலையின்மை விகிதம் மோசமான அளவு உச்சத்தினை தொட்டது. இதனால் சந்தையில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தற்போது வரையிலும் கூட முழுமையாக இந்த விகிதத்தினை எட்டவில்லை என்றாலும் கூட, சற்று குறைந்துள்ளது ஆறுதல் தரும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் வேலை சந்தை

வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் வேலை சந்தை

இது கடந்த மார்ச் மாதத்தில் 6.5% ஆக இருந்த வேலையின்மை விகிதம், ஏப்ரல் மாதத்தில் 7.97% ஆகவும், மே மாதத்தில் 11.9% ஆகவும் அதிகரித்தது. இதே ஜூன் மாதத்தில் 9.17% ஆக குறைந்த நிலையில், ஜூலை மாதத்தில் இன்னும் குறைந்துள்ளது. நடப்பு மாத விகிதத்தினை ஒப்பிடும்போது மார்ச் 2021 விகிதங்களுக்கு அருகில் உள்ளது. இது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருவதையே காட்டுகின்றது.

‘கிராமப்புற ஒப்பீடு

‘கிராமப்புற ஒப்பீடு

கிராமப்புற வேலையின்மை விகிதமானது ஜூலையில் 6.34% ஆக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 7.13% ஆக உள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.13% ஆக அதிகரித்தும், இதே மே மாதத்தில் 10.63 ஆகவும் உச்சம் தொட்டது. எனினும் ஜூன் மாதத்தில் மீண்டும் 8.75% ஆக குறைந்தது.

 நகர்புற ஒப்பீடு

நகர்புற ஒப்பீடு

நகர்புறத்தில் வேலையின்மை விகிதமானது ஜூலை மாதத்தில் 8.3% ஆக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 7.23% ஆகவே குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே ஏப்ரல் மாதத்தில் 9.78% ஆகவும், மே மாதத்தில் 14.73% ஆகவும் அதிகரித்தது. இதன் பிறகு ஜூன் மாதத்தில் 10.07% ஆகவும் குறைந்த நிலையில், ஜூலை மாதத்தில் இன்னும் குறைந்துள்ளது.

இது தான் எதிர்பார்ப்பு

இது தான் எதிர்பார்ப்பு

இது குறித்ர்து ஜீனியஸ் கன்சல்டன்ஸின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆர்பி யாதவ், சந்தையில் அனைத்து துறைகளிலும் தேவை அதிகமாக உள்ளது. இதனால் ஆட்சேர்ப்புக்கான விகிதமும் அதிகரித்துள்ளது. இது இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டில் இந்த விகிதம் மேலும் குறையலாம் என்றும் கூறியுள்ளார்.

எப்போது உச்சம்

எப்போது உச்சம்

கடந்த ஜனவரி 2016க்கு பிறகு மே 2021ல் தான் ஒட்டுமொத்த மாதாந்திர வேலையின்மை விகிதமானது இரட்டை இலக்கில் அதிகபட்சமாக அதிகரித்தது. இது நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதையடுத்து உச்சம் தொட்டது. இதனால் அத்தியாவசியம் தவிர பல துறைகளிலும் சரிவினைக் நோக்கி சென்றன.

ஒட்டுமொத்த நிலவரம்

ஒட்டுமொத்த நிலவரம்

பல லட்சம் பேர் வேலையிழந்தனர். குறிப்பாக கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் இந்த கட்டுப்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில், வேலையின்மை விகிதமானது இந்த மாதங்களில் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில் தான் கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதமானது 23.52% ஆக அதிகரித்தது. இதே கடந்த மே மாதத்தில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதமானது 21.73% ஆக குறைந்தது. இதே ஜூன் மாதத்தில் 10.18% ஆக குறைந்தது.

இயல்பு நிலைக்கு திரும்பும் சந்தை

இயல்பு நிலைக்கு திரும்பும் சந்தை

இதே முந்தைய ஆண்டில் கொரோனா முதல் அலையினால் நாட்டில் வேலையின்மை விகிதமானது உச்சம் தொட்டு, பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதே போல தற்போதும் இரண்டாவது அலைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. எனினும் மூன்றாவது அலை வந்து என்ன செய்யபோகிறதோ என்ற அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது. எப்படியிருப்பினும் தடுப்பூசியினால் தாக்கம் இருந்தாலும் அது பெரியளவில் இருக்காது என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+