நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரத்தில் வேலையின்மை விகிதமானது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து வந்தது.
இந்த நிலையில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதமான 10.99 சதவீதமாக சரிந்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இது கடந்த மே மாதத்தில் 23.48 சதவீதமாக இருந்தது.

இது நாட்டில் கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே அதில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வேலைவாய்ப்புகளானது பெருகியுள்ளதையே இந்த விகிதமானது காட்டுகிறது. வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளதால் தான், வேலையின்மை விகிதமானது குறைந்துள்ளது. அதுவும் கிட்டதட்ட 11 சதவீதம் குறைந்துள்ளது நல்ல விஷயமே.
இதுவே நகர்புறங்களில் இந்த வேலையின்மை விகிதமானது 12.02 சதவீதமாக உள்ளது. இதே கிராமப்புறங்களில் 10.52 சதவீதமாக உள்ளது.
வேலையின்மை விகிதமானது ஹரியானா மாநிலத்தில் அதிகபட்சமானது 33.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து திரிபுராவில் 21.3 சதவீதமாகவும், ஜார்கண்டில் 21 சதவீதமாகவும் உள்ளது.
CMIE தரவுகளின் படி, ஜூன் மாதத்தில் நாட்டில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 37.3 கோடியாக உள்ளது. எனினும் வேலை தேடுவோர் எண்ணிக்கையானது 46.1 கோடியாக உள்ளது. இதே நாட்டின் வேலைவாய்ப்பு விகிதமானது ஜூன் மாதத்தில் 35.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.
நாட்டில் கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில், வேலையின்மை விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இது ஜனவரி மாதத்தில் இருந்து 25.52 சதவீதமாக இருந்தது. இதே மார்ச் மாதத்தில் 23.48% ஆகவும் இருந்தது.
CMIE தரவுகளின் படி, ஏப்ரல் மாதத்தில் சுமார் 12.2 கோடி பேர் வேலைகளை இழந்தனர். கடந்த மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதமானது 8.75% ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் இது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் முறையே 7.22% ,மற்றும் 7.76% ஆகவும் இருந்தது.
ஆக இந்த காலத்தில் வேலையின்மை விகிதம் குறைந்து, வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்றும் CMIE-யின் நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மகேஷ் வியாஸ் கூறியுள்ளார்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications