நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரத்தில், கடந்த சில மாதங்களாக சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக வேலையின்மை விகிதமானது கடந்த சில மாதங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது.
இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதமானது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 1.04 சதவீதம் ஏற்றம் கண்டு, 6.98 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ (CMIE) தரவுகள் கூறுகின்றது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.67 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது..

விவசாயத்துறையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள போதிலும், கடந்த அக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதம் சற்று அதிகரித்துள்ளது. ஆனால் இதில் நல்ல விஷயம் என்னவெனில் நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.15 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 8.45 சதவீதமாக இருந்தது கவனிக்கதக்கது.
இது நாட்டில் கொரோனா பரவலை தடுக்க, நாடு தழுவிய முழு ஊரங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு தொடக்கத்தில் வேலையின்மை விகிதம் மிக அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் லாக்டவுன் தளர்வுக்கு பின்னால் இந்த விகிதமானது படிப்படியாக குறைந்து வருகின்றது. எனினும் கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது சற்று அதிகரித்து காணப்படுவது கவனிக்கத்தக்கது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்திய தொழில் துறை நடவடிக்கைகள் முடங்கின. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகமும் பின்னடைவைச் சந்தித்தது. இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளும் குறைந்தன.
இதன் காரணமாக நிறுவனங்களின் வருவாய் குறைந்து, வேலை வாய்ப்புகளிலும் பின்னடைவு ஏற்பட்டது. இதனாலேயே இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்தது. எனினும் முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது இது அதிகரித்துள்ளது என சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு நல்ல அறிகுறியே.
எனினும் கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் விகிதமானது நடப்பு ஆண்டில் இது வரை இல்லாத அளவு 1 டிரில்லியன் ரூபாயினை தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும், 10.25% அதிகரித்து, 1.05,155 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. இது பொருளாதாரம் மீண்டு வருவதற்கான ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வசூல் நடப்பு ஆண்டில் இரண்டு இலக்க வளர்ச்சியினைக் கண்டு 1 டிரில்லியன் ரூபாயினை தாண்டியுள்ளது இதுவே முதல் முறை.


Click it and Unblock the Notifications