சென்னை: என்னதான் ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் அதிகரித்தாலும், பணப்புழக்கம் இன்னும் மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டில் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து வித்டிராயல் செய்யப்பட்ட தொகை 5.51 % அதிகரித்துள்ளது என்று CMS நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சிஎம்எஸ் இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனம் சமீபத்தில் "CMS Consumption Report 2024" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி கடந்த ஆண்டில், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து வித்டிராயல் செய்யப்பட்ட தொகை 5.51 % அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.

இந்த விகிதம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி விகிதமான 9 சதவீதத்தை விட குறைவாக இருக்கிறது. இது போன நிதியாண்டில் பணத்தின் பயன்பாடு குறைந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது.
2023ஆம் நிதியாண்டில் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொகை ரூ.1.35 கோடியாக இருந்தது. இந்த விகிதம் 2024ஆம் நிதியாண்டில் ரூ.1.43 கோடியாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் நிதி ஆண்டில் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொகை 10.37 சதவீதம் மெட்ரோ பகுதிகளில் அதிகரித்துள்ளது. மேலும் 3.94 சதவீதம் வளர்ந்து வரும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
FY24 இல், இந்தியாவில் மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுத்த முக்கிய பகுதிகளாக மூன்று இடங்கள் உள்ளன. அவை வட மாநிலங்களான டெல்லி மற்றும் உத்தரபிரதேசம், மேலும் இரண்டு தென் மாநிலங்ககளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மற்றும் ஒரு கிழக்கு மாநிலம் மேற்கு வங்கம். இந்தப் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் ஏடிஎம்மில் இருந்து பணத்தை வித்டிரா செய்துள்ளனர்.
அதில் 2024 நிதியாண்டில் கர்நாடகாவில் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 1.83 கோடி ரூபாயும், டெல்லியில் ரூ. 1.82 கோடி ரூபாயும், மற்றும் மேற்கு வங்கத்தில் ரூ. 1.62 கோடி ரூபாயும் அதிகபட்சமாக ஏடிஎம்மில் இருந்து வித்டிரா செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, சுமார் 49 சதவீத ஏடிஎம்கள் பெரிய நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ளன, தோராயமாக 51 சதவீதம் ஏடிஎம்கள் சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் (SURU) உள்ளன. இதேபோல், தனியார் துறை வங்கிகளைப் பொறுத்தவரை, சுமார் 64 சதவீத ஏடிஎம்கள் பெரிய நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ளன. அதே நேரத்தில் 36 சதவீதம் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளன.
மொத்தமாக உள்ள 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 2024ஆம் நிதியாண்டில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏடிஎம் வித்டிராயல், போன நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 6.45 சதவீதம் அதிகரித்துள்ளது. மீதமுள்ள 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சராசரியாக 4.14 சதவீதம் ஏடிஎம் வித்டிராயல் குறைந்துள்ளது என்று CMS இன்போ சிஸ்டம்ஸ் அறிக்கை கூறுகிறது.


Click it and Unblock the Notifications