இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த மாற்றத்தில் வெற்றி காணுபவர்கள் அடுத்து 20 வருடத்திற்கு மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும் என்பதால் அனைத்து நிறுவனங்களும் கடுமையான முயற்சிகள் உடன் நீண்ட காலத் திட்டத்தைத் தீட்டி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிஎன்ஜி கார்களின் விற்பனை எண்ணிக்கை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியேறி வந்த காலத்தைத் தொடர்ந்து புதிதாக வந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம் வர்த்தகத்தை இழக்க கூடாது என்பதற்காக இந்திய நிறுவனங்கள் போட்டிப்போடும் நிலை உருவாகியுள்ளது.
மாற்று எரிபொருள் கார்கள்
இதேவேளையில் மாற்று எரிபொருள் கார்கள் தயாரிப்பும், விற்பனையும் வேகமாக விரிவாக்கம் அடைந்து வரும் நிலையில் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
சிஎன்ஜி கார்களின் விற்பனை
ஒருபக்கம் மாற்று எரிபொருள் அதாவது எலக்ட்ரிக் கார்கள், ஹைட்ரஜென் வாயு & ஹைட்ரஜென் செல் கார்கள், சிஎன்ஜி கார்கள் தயாரிப்பதில் அதிகளவிலான முதலீட்டை செய்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குச் சிஎன்ஜி கார்களின் விற்பனை எண்ணிக்கையும், அதற்கான காரணமும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
முக்கியப் பிரச்சனைகள்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களின் அதிகப்படியான விலையும், தீ பிடிக்கும் ஆபத்தும், பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு என்டரி பிரிவு வாடிக்கையாளர்களை உண்மையில் பயமுறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவின் அதிகப்படியான என்டரி பிரிவு வாடிக்கையாளர்கள் தற்போது சிஎன்ஜி கார்களை வாங்க துவங்கியுள்ளனர்.
27000 சிஎன்ஜி கார்கள் விற்பனை
ஏப்ரல் மாதம் இந்தியாவில் மொத்தம் 27000 சிஎன்ஜி கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இந்த அளவீடு கடந்த வருடத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இதை விட முக்கியாகப் பெட்ரோல், டீசல் கார்களை ஒப்பிடும் போது சிஎன்ஜி கார்களை இயக்குவதில் ஏற்படும் செலவுகள் 40-50 சதவீதம் குறைகிறது.
வெறும் 2 ரூபாய் மட்டுமே
மேலும் சிஎன்ஜி வாகனங்கள் ஒரு கிலோமீட்டர் செல்ல வெறும் 2 ரூபாய் மட்டுமே செலவாகிறது என இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி-யின் உயர் நிர்வாகத் தலைவர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். இதேபோல் இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் மாருதி சுசூகி முன்னோடியாக உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications