நம் நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கார்கள் விற்பனை வருகிறது. பொதுவாக பெட்ரோல்,டீசல் கார்கள்தான் அதிகளவில் விற்பனையாகும். ஆனால் கடந்த நிதியாண்டில் முதல் முறையாக அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) வாகனங்கள் விற்பனை டீசல் கார்களை காட்டிலும் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. அரசாங்க தரவுகளின்படி (வாகன் போர்டல்), கடந்த 2024-25ம் நிதியாண்டில் 7.87 லட்சம் சிஎன்ஜி பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், டீசல் கார் விற்பனை 7.36 லட்சம் யூனிட்களாக இருந்தது. மொத்த பயணிகள் கார் விற்பனையில் சிஎன்ஜி கார் விற்பனை இப்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது வெறும் 15 சதவீதமாக இருந்தது.
புதிதாக கார் வாங்குபவர்கள் சிஎன்ஜி கார்களை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமே எரிபொருள் விலைதான். டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை காட்டிலும் சிஎன்ஜி விலை மிகவும் குறைவு. உதாரணமாக டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.94.77 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.87.67ஆகவும் உள்ளது. அதேசமயம் சிஎன்ஜி கிலோவுக்கு ரூ.76.09ஆக மலிவான விலையில் கிடைக்கிறது.
அடுத்து காற்று மாசுபாடு மிகவும் முக்கியமான காரணமாக மாறி வருகிறது. டெல்லி போன்ற நகரங்கள் டீசல் வாகனங்களுக்கு கடுமையான தடை விதிக்க தொடங்கி விட்டன. அவற்றை இன்னும் 10 ஆண்டுகள் மட்டுமே இயக்க அனுமதிக்கின்றன. இதுவும் பல வாடிக்கையாளர்கள் சிஎன்ஜி வாகனங்கள் பக்கம் திரும்புவதற்கு முக்கிய காரணம்.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் சிஎன்ஜி வாகனங்கள் விற்பனையிலும் முன்னிலையில் உள்ளது. நாட்டின் மொத்த சிஎன்ஜி கார் விற்பனையில் 70 சதவீதம் மாருதி மாடல்கள்தான். பிரெஸ்லா, எர்டிகா,எக்ஸ்எல்6 மற்றும் கிராண்ட் விட்டாரா உள்பட 13 சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. அ்ந்நிறுவனம் விற்பனை செய்யும் 3 மாருதி கார்களில் ஒன்று சிஎன்ஜி கார் ஆகும்.
சிஎன்ஜி கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கணிசமான விற்பனையை கொண்டுள்ளது. இந்நிறுவனம் 6 சிஎன்ஜி மாடல் வாகனங்களை சந்தையில் விற்பனை செய்த வருகிறது. அடுத்து ஹூண்டாய் நிறுவனம் சிஎன்ஜி பிரிவில் புதிய மாடலை அறிமுகம் செய்வதன் மூலம் விற்பனை அதிகரித்து வருகிறது.
சிஎன்ஜி எரிபொருள் விலை குறைவு ஆனால் கார் விலை கொஞ்சம் அதிகம். உதாரணமாக சிஎன்ஜி கார்கள் விலை பெட்ரோல் வகை கார்களை காட்டிலும் சுமார் ரூ.1 லட்சம் அதிகம். இருந்தாலும் சிஎன்ஜி கார்கள் அதிக மைலேஜ் தருவதால் அவை நீண்ட காலத்துக்கு பணத்தை மிச்சப்படுத்துகின்றன.
டாடா நெக்ஸான் சிஎன்ஜி மாடல் கார் விலை ரூ.9 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. அதேசமயம் நெக்ஸான் பெட்ரோல் காரின் விலை ரூ.8 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. மாருதி பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடல் கார் விலை ரூ.9.64 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. அதேசமயம் பிரெஸ்ஸா பெட்ரோல் காரின் விலை ரூ.8.69 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
எரிபொருள் திறன்: பிரெஸ்ஸா சிஎன்ஜி மாடல் கார் கிலோவுக்கு 25 கி.மீ. செல்லும், அதேசமயம் பிரெஸ்ஸா பெட்ரோல் கார் லிட்டருக்கு 17 கி.மீ. மைலேஜ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications