ரியல் எஸ்டேட் வேகமாக வளர வளர வீட்டு வாடகை, கடை வாடகைகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரு நகரங்களில் வீட்டு வாடகையை கேட்டால் தலையே சுற்றுகிறது, வாங்கும் சம்பளத்தில் பெரும் தொகையை வீட்டு வாடகைக்காக கொடுக்க வேண்டும் என்பதால் பலர் குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதிலும் முக்கியமாக அனைத்து நிறுவனங்களும் தனது ஊழியர்களை தற்போது அலுவலகம் வர வேண்டியதை கட்டாயமாக்கியிருக்கும் வேளையில் பெரு நகரங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிப்பது மட்டும் அல்லாமல் காலியாக இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதோடு, வாடகையும் அதிகமாகவே உள்ளது.

டெக் நகரமான பெங்களூர் சர்ஜாபுரா சாலை, வொயிட்பீல்ட் போன்ற புறநகர பகுதியில் 2 BHK வீட்டுக்கு குறைந்துபட்த வாடகை 27000 ரூபாய், இதை தாண்டி மெயின்டனென்ஸ் தொகையும் உள்ளது, 10 மாத அட்வான்ஸ் தொகையும் உள்ளது. இது மாதம் 50000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு பெரும் நிதி சுமை.
இதை எளிதாக கடந்து போகவே இன்றைய இளைய தலைமுறையினர் CO-LIVING என்ற முறையை அதிகளவில் தேர்வு செய்கின்றனர். வாடகை, மெயின்டனென்ஸ், வீட்டு பராமரிப்பு செலவு ஆகியவற்றை கட் செய்ய co-living முறை தற்போது இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக மாறி வருகிறது.
சாதாரண ஹாஸ்டல் அல்லது PG-க்கும் இந்த கோ லிவ்விங் சேவைக்கும் என்ன வித்தியாசம். ஹாஸ்டல் அல்லது PG-யில் கிடைக்கும் அனைத்து சேவைகளும் உயர் தரத்தில் கிடைக்கும். இதுமட்டும் அல்லாமல் ஒரு 1 BHK வீட்டை எவ்விதமான மெயின்டனென்ஸ் செலவுகளும் இல்லாமல் full furnished முறையில் குறைந்த செலவில் பெற முடியும். மேலும் ஒரு அப்பார்ட்மென்ட் வீட்டில் இருக்கும் அனைத்து சேவைகளும் இங்கு உயர் தரத்தில் கிடைக்கும்.
கோ லிவ்விங் வர்த்தக பிரிவில் Zolo, Stanza, HelloWorld, Nestaway என பல நிறுவனங்கள் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் 2BHK, 3BHK மற்றும் 1BHK வீட்டை full furnished முறையில் ஒரே நிலையான கட்டணத்தில் வாடகைக்கு விடுகிறது. இதைவிட முக்கியமாக இந்த கோ லிவ்விங் வீடுகள் பெரும்பாலும் அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கும் காரணத்தால் பயண செலவுகளும் இல்லை.
பெங்களூரில் ஒரு 1BHK வீட்டை அலுவலகத்திற்கு அருகில் வாடகைக்கு எடுக்க வேண்டுமெனில் குறைந்தது 1 முதல் 2 லட்சம் அட்வானஸ், 15 ஆயிரம் ரூபாய் வாடகை, மெயின்டனென்ஸ், வீட்டு செலவுகள் என அனைத்தையும் கொடுக்க வேண்டும்.
ஆனால் இந்த கோ லிவ்விங் சேவையில் 2 பேர் ஷேர் செய்யும் 500 சதுரடி கொண்ட 2BHK வீட்டில் 16000 முதல் 20000 ரூபாய் கொடுத்தால் போது பார்கிங் வசதி உடன் full furnished அறை கிடைக்கும். இதற்கு 2 மாத வாடகையை அட்வான்ஸ் ஆக கொடுத்தால் போதும்.
இத்தகைய சேவை ஆண்கள், பெண்களுக்கு தனியாக வழங்கப்படுவது மட்டும் அல்லாமல் தற்போது பெரு நகரங்களில் live-in couples-களுக்கும் வழங்கப்படுகிறது. இதனால் பெரிய அளவிலான நன்மைகளை இளம் தலைமுறையினர் அடைகின்றனர், இதனால் அடுத்த சில வருடத்தில் வீட்டு ஓனர்கள் சொந்தமாக வீடுகளை வாடகைக்கு விடும் சுமை இருக்காது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications