இந்தியாவில் மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு 1966க்குப் பின் முதன்முறையாக 50 சதவீதத்துக்கும் குறைவாக இறங்கியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சாதனை அளவாக 13,699 மெகாவாட்களாக 71 சதவீத மின்சார உற்பத்தியில் பங்கு வகிக்கிறது.

இன்ஸ்டிடியூட் ஃபார் எனர்ஜி எக்கனாமிக்ஸ் அண்டு பைனான்சியல் அனாலிசிஸ் அறிக்கைப்படி இந்திய அரசின் இலக்கான 50 சதவீத ஒட்டுமொத்த படிம எரிபொருள் சார்ந்த மூலப் பொருட்கள் மூலம் மின் உற்பத்தித் திறனை 2030க்குள் அடைய வேண்டும் என்பதற்கு முன்பே எட்டியுள்ளது.
ஜி7 நாடுகளின் நிலக்கரி தேவை வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளது. 1900 ஆம் ஆண்டில் இருந்து இல்லாத அளவுக்கு 2023இல் குறைந்தது.
இந்தியாவில் பெரிய அளவு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி மையங்கள் 69 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. 2024 நிதியாண்டில் அரசின் இலக்கான 50 கிகாவாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டுக்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட சரிவிலிருந்து கோவிட் காரணமாக உலகளவில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சப்ளை செயின் பிரச்னை மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் போன்றவைகளும் இதற்கு காரணமாகும்.
இந்தியாவின் மின்சார உற்பத்தித் திறனில் நிலக்கரியின் பங்கு 50 சதவீதத்துக்கும் கீழே 1960 களுக்குப் பின்னர் குறைந்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளில் மிகப் பெரிய மின் தட்டுப்பாடு ஜூனில் ஏற்பட்டது.
இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் பெரிய அளவு சந்தை விரிவாக்கம், மத்திய அரசின் ஆதரவு ஆகும்.
எம்பரின் ஐந்தாவது வருடாந்திர குளோபல் எலக்ட்ரிசிட்டி ரிவியூவில் 80 நாடுகளில், இந்தியா உலகின் சூரிய சக்தி உற்பத்தி தரவரிசையில் சீனா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சோலார் 19 வது ஆண்டாக உலகின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார ஆதாரமாக இருந்தது. கடந்த ஆண்டு நிலக்கரியை விட இரண்டு மடங்கு புதிய மின்சாரத்தை சேர்த்தது என்று செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
சீனா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பின்னால், 2023 இல் சூரிய மின் உற்பத்தியில் உலகின் நான்காவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. முதல் நான்கு நாடுகள் 2023 ஆம் ஆண்டில் சூரிய சக்தி வளர்ச்சியில் முக்கால்வாசி பங்கைக் கொண்டுள்ளன என்று அது மேலும் கூறியது.
2000 ஆம் ஆண்டிலிருந்து, புதுப்பிக்கத்தக்க மின்சக்தியிலிருந்து உலகளாவிய மின்சாரத்தின் பங்கு 19 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்துக்கும் அதிகமாகியுள்ளது.
மறுபுறம், நிலக்கரியை நம்பியிருப்பதை இந்தியாவால் கைவிட முடியவில்லை என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பாதகமான வானிலை மற்றும் அதிகரித்து வரும் மின்தேவையானது, நாடு தனது மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான நிலக்கரியை தொடர்ந்து நம்பியுள்ளது என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இந்த ஆண்டு நிலைமை மாற வாய்ப்பில்லை, மத்திய மின்சார ஆணையம் நீர்மின்சாரத்தில் பற்றாக்குறையை எதிர்பார்க்கிறது, இது மின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications