அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நிறுவனங்களின் நிதியை திசை திருப்பி ரூ.41,921 கோடிக்கும் அதிகமான மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்ராபோஸ்ட் (Cobrapost) என்ற புலனாய்வு ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.
கோப்ராபோஸ்ட்டின் புலனாய்வு அறிக்கையின்படி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கேபிடல் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட குழும நிறுவனங்களிடம் இருந்து வங்கி கடன்கள், ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட சுமார் ரூ.28,874 கோடி நிதி நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழுமம் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது, வெளிநாடுகளைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதுதான். அதாவது, ரிலையன்ஸ் குழுமம் நேரடியாகப் பணத்தைக் கொண்டுவராமல் சிங்கப்பூர், மொரிஷியஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல நாடுகளிலும் செயல்படும் தனது துணை நிறுவனங்கள் மற்றும் வெறும் பெயரளவுக்கு மட்டுமே இருக்கும் போலி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமாகப் பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 1.535 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.13,047 கோடி) தொகையை, கணக்கில் காட்டாமல், முறைகேடாக இந்தியாவுக்குள் கொண்டுவந்ததாக கோப்ராபோஸ்ட் குற்றம் சாட்டுகிறது.
இந்த வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளில் ஒன்று குறிப்பாக சந்தேகத்தை எழுப்புகிறது. 'நெக்ஸ்ஜென் கேபிடல்' என்ற மர்மமான ஒரு தரப்பிடமிருந்து 750 மில்லியன் டாலர் தொகை, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு வந்துள்ளது. அந்தத் தொகை பின்னர், ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய நிர்வாக நிறுவனமான ரிலையன்ஸ் இன்னோவென்ச்சர்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலான பரிமாற்றம், பணமோசடிக்கு சமமான செயல் என்று புலனாய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், குழுமத்தின் நிதி தனிப்பட்ட பயன்பாட்டுக்கும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அனில் அம்பானி 2008 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.166 கோடி) மதிப்புள்ள ஒரு சொகுசுப் படகை பட்டியலிடப்பட்ட குழும நிறுவனங்களின் நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகவும் அந்தப் புலனாய்வு அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
ரிலையன்ஸ் குழுமம் மறுப்பு : கோப்ராபோஸ்ட்டின் இந்தக் குற்றச்சாட்டுகளை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மறுத்துள்ளது. இது நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்று அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். கோப்ராபோஸ்ட் என்பது 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு செயல்பாட்டில் இல்லாமல் இருந்த ஒரு 'இறந்துபோன தளம்' என்றும், அதற்கு எந்தவிதமான பத்திரிகை நம்பகத்தன்மையும் இல்லை என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் சொத்துக்களைக் கைப்பற்ற விரும்பும் போட்டி நிறுவனங்களின் வணிக நலன்களுக்காகவே இந்தக் குற்றச்சாட்டுகள் ஒரு 'கார்ப்பரேட் ஹிட் ஜாப்' ஆக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குழுமம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி முறைகேடுகள் குறித்த தகவல்கள் அனைத்தும் புதியவை அல்ல. அவை ஏற்கனவே சிபிஐ, அமலாக்கத்துறை, செபி போன்ற நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு பொதுவெளியில் இருக்கும் பழைய தகவல்களின் மறுசுழற்சி என்றும் ரிலையன்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
இந்த அறிக்கையின் முக்கிய நோக்கம், ரிலையன்ஸ் குழுமத்தின் 55 லட்சம் பங்குதாரர்களிடையே பீதியைத் தூண்டி, பங்கு விலைகளைச் சரிகச் செய்வதே ஆகும். இதன் மூலம், டெல்லி மின் விநியோக நிறுவனம், மும்பை மெட்ரோ மற்றும் ரோசா மின் திட்டம் போன்ற ரிலையன்ஸின் மதிப்புமிக்க சொத்துக்களைக் குறைந்த விலைக்குப் போட்டியாளர்கள் கைப்பற்ற முடியும் என்றும் ரிலையன்ஸ் குழுமம் வலுவாக நம்புகிறது.
இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் போன்ற குழும நிறுவனங்கள், தங்கள் பங்குகளின் வர்த்தகத்தில் நடந்துள்ள முறைகேடான நடவடிக்கைகளைக் குறித்து விசாரிக்கக் கோரி செபி-யிடம் புகார் அளித்துள்ளன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications