உலகின் முன்னனி குளிர்பான விற்பனை நிறுவனமான கோகோ கோலா இந்தியாவில் தற்போது அதிகப்படியான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
அதிலும் முக்கியமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கேம்பா பிராண்ட்டின் கீழ் 3 விதமான சுவைகளில் குளிர்பானத்தை கோகோ கோலா-வை விடவும் குறைவான விலையில் அறிமுகம் செய்ததில் இருந்து இந்தியாவில் கோலா பிராண்ட் அனைத்தும் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க நிறுவனமான கோகோ கோலா தனது வர்த்தகத்தை வலிமையாக்கும் விதமாக ஆன்லைன் உணவு ஆர்டர் செய்யும் தளமான Thrive நிறுவனத்தில் சிறிய அளவிலான பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையும் துவங்கியுள்ளது கோகோ கோலா.
Thrive நிறுவனம் இந்தியாவில் 5500 உணவுகள் உடன் இணைந்து தனது உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகிறது. இது மட்டும் அல்லாமல் பல சந்தையில் Thrive நிறுவனம் ஸ்விக்கி, சோமேட்டோ உடன் போட்டிப்போட்டு வருகிறது. கோகோ கோலா - Thrive மத்தியிலான பேச்சுவார்த்தை உறுதியாகும் பட்சத்தில் இந்திய ஸ்டார்ட்அப்-ல் கோகோ கோலா-வின் முதல் முதலீடாக இருக்கும்.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் டிாமினோஸ் பீட்சா-வை இயக்கும் ஜூப்லியன்ட் புட்வொர்க்ஸ் நிறுவனம் Thrive நிறுவனத்தில் சுமார் 35 சதவீத பங்குகளை வெறும் 24.75 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இந்த முதலீடு மூலம் Thrive நிறுவனம் ஜூப்லியன்ட் புட்வொர்க்ஸ் நிறுவனத்திற்கு டெலிவரி சேவையும், வாடிக்கையாளர்களையும் பகிர ஒப்புக்கொண்டது.

கோகோ கோலா நிறுவனம் இந்தியாவில் தற்போது கோகோ கோலா, தம்ஸ் அப், Minute Maid juices, Georgia coffee மற்றும் Kinley குடிநீர் ஆகியவற்றை McDonald's போன்ற பல முக்கிய கடைகளில் கூட்டணி வைப்பது மூலம் கோகோ கோலா பிராண்ட் குளிர்பானத்தை மட்டுமே விற்பனை செய்யும் வசதியை கொண்டு உள்ளது.
கோகோ கோலா தற்போது முக்கியமான திட்டத்தில் இறங்கியுள்ளது, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுகள் உடன் காம்போ-வாக கோகோ கோலா பிராண்ட் குளிர்பானங்களை விற்பனை செய்யும் முக்கியமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கோகோ கோலா நீண்ட கால வர்த்தக வளர்ச்சிக்கு அடிபோடுகிறது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications