உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, தனது இந்தியா நிறுவனத்தின் முக்கிய துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் (HCCB) நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கோகோ கோலா பிராண்டின் மொத்த பாட்டிலிங் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமான Hindustan Coca-Cola Beverages உள்ளது. தற்போது இந்த நிறுவனப் பங்குகளைத் தான் விற்க பெரும் தலையைத் தேடி வருகிறது.

இந்த குளிர்பான விற்பனை சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கோகோ கோலா நிறுவனம் இந்த பங்குகளை நான்கு முன்னணி இந்திய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களிடம் விற்க அதன் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக கோகோ கோலா போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாமலும், வாய்ப்புகள் இல்லாத போது தான் புதிய கதவுகளைத் திறக்க பங்குகளை விற்கும். கோகோ கோலா கிட்டத்தட்ட இதே போன்ற நிலையில் இருப்பதால் பங்குகளை விற்க முடிவு எடுத்திருக்கக் கூடும் என யூகம் இருக்கிறது.
கோகோ கோலா தற்போது இந்தியாவில் டாமினோஸ் பீட்சா-வின் கடைகளை நடத்தும் ஜூபிலண்ட் குழுமம், டாபர் நிறுவனத்தின் பர்மன் குடும்பம், பெவிகால் (Fevicol), எம்-சீல் (M-Seal) மற்றும் டாக்டர் ஃபிக்சிட் (Dr Fixit) போன்ற பிரபல பசைகளை தயாரிக்கும் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பாரேக் குடும்பம், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் குடும்பத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது இந்த 4 நிறுவனங்களின் குடும்ப அலுவலகங்கள் (family offices) உடன் செய்யப்பட்டு வரும் பேச்சுவார்த்தையின் மூலம் 800 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை கோகோ கோலா இந்தியா நிறுவனம் எதிர்க்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய பேச்சுவார்த்தையில், இந்த முதலீட்டை தங்கள் குழும நிறுவனங்கள் வழியாக முதலீடு செய்யும் வாய்ப்புகளையும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இதனால் கோகோ கோலா உடன் பெரும் சாம்ராஜ்ஜியம் விரைவில் முதலீடு செய்யும் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
இது ஒரு பெரிய அளவிலான (bulge-bracket) ஒப்பந்தமாக இருப்பதால், இந்த முதலீடு தனிப்பட்ட முறையில் வருமா அல்லாது கூட்டணியில் வருமா என்பது தெரியவில்லை. இதேபோல் கோகோ கோலா தரப்பில் இதுவரையில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கோகோ கோலா டார்கெட் செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக சாம்ராஜ்ஜியங்களாகும். மேலும் இவர்களின் முதலீட்டின் மூலம் கோகோ கோலா தனது தயாரிப்பைக் கூடுதலாக டிஸ்ட்ரிபியூட் செய்ய முடியும்.
உதாரணமாக, ஜூபிலண்ட் ஃபுட்ஒர்க்ஸ் (Jubilant Foodworks) நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய உணவு துறை நிறுவனம் ஆகும், இந்திய QSR பிரிவில் ஜூபிலண்ட் கிங். இது ஏற்கனவே நுகர்வோர் பொருட்கள் விற்பனை துறையில் இருப்பதுடன், டோமினோஸ் பீட்சா, டன்கின் டோனட்ஸ் மற்றும் போப்பாய்ஸ் (Domino's Pizza, Dunkin' Donuts, Popeyes) ஆகிய பிராண்டுகளுக்கான பிரத்யேக உரிமத்தை (franchise) இந்தியாவில் கொண்டுள்ளது.
மேலும், ஆசியாவில் உள்ள ஐந்து சந்தைகளிலும் டோமினோஸ் பீட்சா உரிமத்தை ஜூபிலண்ட் ஃபுட்ஒர்க்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறது. இதோடு துருக்கியின் முன்னணி காபி விற்பனை நிறுவனமான காஃபி (Cuffy) ஐயும் இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications