பெங்களூரு: பிரபல குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோகோ கோலா இந்தியா, கர்நாடகாவில் மாம்பழ சாகுபடியில் இறங்கியுள்ளது. இதற்காக வேளாண் துறை தீர்வுகளை வழங்கும் கிராம் உன்னாடி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
கர்நாடகாவில் மாம்பழ சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோகோ கோலா இந்தியா நிறுவனம் கிராம் உன்னாடி நிறுவனத்துடன் இணைந்து "ப்ராஜெக்ட் மேங்கோ உன்னாடி" என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் அல்போன்சா மற்றும் டோடாபுரி ரக மாம்பழங்களின் விளைச்சலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவர்கள் செயல்பட உள்ளனர். மாநில தோட்டக்கலை அமைப்பான க்ரிஷ் விக்யான் கேந்திரா, மாம்பழ வாரியம் மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்வேறு மாவட்டத் தோட்டக்கலை துறைகள் ஆகியவற்றோடு நெருக்கமாக இணைந்து இந்த திட்டத்தில் செயல்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம் உன்னாடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான அனீஸ் ஜெயின் இது பற்றி கூறுகையில் இந்த புதுமையான திட்டத்தில் கோகோ கோலா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளார். நவீன நடைமுறைகளை பின்பற்றி அதே நேரம் தரத்திலும் கவனம் செலுத்துவதன் மூலம் கர்நாடகாவில் உள்ள மாம்பழ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
கோகோ கோலா இந்தியா நிறுவனத்துடன் இணைந்து மாம்பழ விவசாயத்தில் நிலையான வளர்ச்சியையும் புதுமைகளையும் கொண்டு வருவது தான் எங்களின் நோக்கம் என்றும் இது விவசாயிகளுக்கு பயனளிப்பதோடு மட்டுமல்லாமல் நமது சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்க கூடிய ஒரு திட்டமாக இருக்கும் என அனீஸ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கோகோ கோலா இந்தியா நிறுவனத்தின் மூத்த இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய ராஜேஷ் அயப்பிள்ளை ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்திற்கான மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டத்தை முன்னெடுத்திருப்பதாக கூறியுள்ளார்.
"மேங்கோ உன்னாடி" திட்டத்தின் மூலம் மேம்பட்ட தோட்டக்கலை தீர்வுகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றும் இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார். நிச்சயமாக இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும் எனக் கூறியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு பழத்தோட்டங்கள் மற்றும் அதிக அடர்த்தி கொண்டு தோட்ட நடைமுறைகளுக்கான புதிய தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தின் மூலம் கற்றுத் தருவோம் என்றும் இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications