உலகிளவில் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான கோகோ கோலா இந்தியாவிலும் பெரும் ஆதிக்கம் செய்யும் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் கேம்ப கோலா அறிமுகம் செய்த பின்னர் குளிர்பான சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது. இப்படியிருக்கையில் மக்களை மாற்று வழிகளில் கவர வேண்டும் என்ற நோக்கத்தில் ரெடிமேட் டீ விற்கும் திட்டத்தை கோகோ கோலா கையில் எடுத்துள்ளது.
கோகோ கோலா இந்தியா நிறுவனம் Honest Tea என்ற பிராண்டின் கீழ் ரெடி-டு டிரிங்க் டீ விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, கோகோ கோலா நிறுவனம் லக்ஷ்மி குழுமத்தின் அடையாளமான டார்ஜிலிங் தேயிலை தோட்டமான Makaibari உடன் முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த கூட்டணி கீழ் Makaibari டீ எஸ்டேட்-ல் இருந்து கோகோ கோலா தேயிலையை நேரடியாக வாங்கி ஐஸ் கிரீன் டீயை தயாரிக்க உள்ளது. ஹானஸ்ட் டீ என்ற பிராண்ட், கோகோ கோலா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானஸ்ட்டுக்கு சொந்தமானது. கோகோ கோலா இந்தியாவில் ஐஸ் கிரீன் டீ-யை இரண்டு சுவைகளில் அறிமுகம் செய்ய உள்ளது. எலுமிச்சை-துளசி மற்றும் மாம்பழம் சுவையில் அறிமுகம் செய்ய உள்ளது.
பெங்கால் உலகளாவிய வணிக உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளான நவம்பர் 22 அன்று கோகோ கோலா புதிய பாட்டில் ஐஸ் கிரீன் டீ-யை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகத்தின் போது கொல்கத்தாவை தளமாகக் கொண்ட லக்ஷ்மி டீ கோ பிரைவேட் லிமிடெட்டின் மகாய்பரி டீ எஸ்டேட்டில் இருந்து ஆர்கானிக் கிரீன் டீ தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பெங்கால் உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டின் (பிஜிபிஎஸ்) ஏழாவது கூட்டத்தில் இரு நிறுவனங்களிடையே இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. மேலும் கோகோ கோலா நிறுவனம் எலுமிச்சை-துளசி மற்றும் மாம்பழம் சுவையில் அறிமுகம் செய்துள்ள ஐஸ் கிரீன் டீ முதலில் இந்தியாவிலும், அதை தொடர்ந்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications