இந்தியாவில் குளிர்பான விற்பனையில் நுழைந்து, தின்பண்டத்தில் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் கோகோ கோலா அடுத்ததாக மதுபான விற்பனையில் இறங்க உள்ளது கோகோ கோலா. மதுபானம் என்பது புதிய வர்த்தகமாக இருந்தாலும் கோகோ கோலா-வின் சப்ளை செயின் மிகவும் வலிமையாக இருக்கும் காரணத்தால் சிறப்பாகச் செயல்பட முடியும் எனப் பெரிய அளவில் நம்புகிறது.
இந்திய வர்த்தகத்தில் கோகோ கோலா பிற நாட்டில் இருப்பது போலவே பெப்சி உடன் போட்டிப்போட்டு வரும் வேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த கேம்பா பிராண்ட் குளிர்பானத்தை விலை குறைப்பு மூலம் அடக்கியது. இந்த நிலையில் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் திட்டம் போட்டு கோகோ கோலா தற்போது மதுபான விற்பனையில் இறங்கியுள்ளது.

Coca-Cola பிராண்ட் இந்தியாவில் அதனுடைய உலகளாவிய மதுபான விற்பனை பிரிவில் ரெடி-டு ட்ரிங்க் பானமான Lemon-Dou அறிமுகம் செய்துள்ளது. ஆல்கஹால் பிரிவில் கோகோ கோலா தனது முதல் அறிமுகத்தைத் தற்போது கோவா மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் சோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டும் Lemon-Dou மதுபானத்தைப் பைலட் சோதனை செய்து வருவதாக Coca-Cola இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். லெமன்-டூ என்பது ஷோச்சு (shochu) மற்றும் எலுமிச்சை சாறு கலந்த மதுபானம், ஷோச்சு என்பது ஜப்பான் நாட்டின் மதுபான வகையைச் சேர்ந்தது.
Lemon-Dou மதுபானத்தின் தயாரிப்பு மற்றும் விநியோகம் இந்தியாவில் உள்ள பிரத்தியேகமான மற்றும் தனிப்பட்ட தளத்தில் செய்யப்படுகிறது எனக் கோகோ கோலா இந்திய வர்த்தகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் chuhai எனப்படும் மதுபானம் Lemon-Dou என்ற பெயரில் கோகோ கோலா உலக நாடுகளில் விற்பனையாகி வருகிறது. தற்போது நடந்து வரும் சோதனை திட்டத்தில் 250 மில்லி மதுபானம் 230 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. Lemon-Dou தான் கோகோ கோலா-வின் முதல் மதுபானம், இது முதல் முறையாக 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications