அமெரிக்காவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான கோக கோலா நிறுவனம், அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 17 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்தி தொகுப்பில், உலகம் முழுவதிலுமான அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 17 சதவீதம் பேரை, அதாவது 2,200 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது இந்த நிறுவனம் அதன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதி எனவும் தெரிவித்துள்ளது.
மொத்தம் எத்தனை ஊழியர்கள்
அட்லாண்டாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், இதன் பணி நீக்கங்களில் பாதி அமெரிக்காவில் இருக்கும் என்றும் கூறியுள்ளது. கோக கோலாவில் மொத்தம் 86,200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் 10,400 பேர் பணியாற்றுகின்றனர். கோக கோலா கொரோனாவின் காரணமாக அதன் விற்பனை சரிந்துள்ள நிலையில் இப்படியொரு முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வருவாய் சரிவு
இது குறித்து கோக கோலா தரப்பில், கொரோனாவினை கட்டுபடுத்தும் விதமாக, உலக நாடுகள் பலவும் தளர்வில்லா முழு லாக்டவுனை பல மாதங்களாக அமல்படுத்தின. இதன் காரணமாக பல நாடுகளில் தியேட்டர்கள், அரங்கங்கள் உள்ளிட்ட பலவும் மூடப்பட்டன. இதன் காரணமாக அதன் விற்பனை பெரியளவில் முடங்கியது. கடந்த செப்டம்பர் காலாண்டில் கூட அதன் வருவாய் 9 சதவீதம் குறைந்து, 8.7 பில்லியன் டாலராக குறைந்தது.
பிராண்டுகளும் குறைப்பு
ஆக இந்த சரிவு ஏற்கனவே பின்னோக்கி சென்று கொண்டிருந்த நிறுவனத்தினை, மறுசீரமைப்புக்கு தள்ளியது. இதன் காரணமாக நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. மேலும் தற்போது பணி நீக்கம் மட்டும் அல்ல, கோக கோலா, அதன் பிராண்டுகளின் எண்ணிக்கையும், பாதியாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
என்னென்ன பொருட்கள் நிறுத்தம்
குறிப்பாக டேப் (Tab), ஜிகோ தேங்காய் நீர் (Zico coconut water), டயட் கோக் (Diet Coke Fiesty Cherry), ஓட்வாலா ஜீஸ்( Odwalla juices) உள்ளிட்ட குறைவாக விற்பனையாகி வரும் பிராண்டுகளை தனது லிஸ்டில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு மினிட் மொய்ட் உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய தயாரிப்புகளை வளர்ச்சி பெற வைக்க இந்த சேமிப்பை பயன்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
வணிகப் பிரிவையும் குறைக்க திட்டம்
அதோடு கோக கோலா தனது வணிக பிரிவுகளையும் 17-லிருந்து 9 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. இப்படி கொரோனாவினால் பெரும் பின்னடைவை சந்தித்த நிறுவனங்கள் பலவும் பணி நீக்கம் சம்பள குறைப்பை செய்து வந்த நிலையில், தற்போது அந்த பட்டியலில் கோக கோலாவும் சேர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications