இந்த போட்டி மிகுந்த வேளையில் அனைத்து துறையிலும், அனைத்து பிரிவிலும் அதிகப்படியான லாபத்தை நிர்வாகம் விரைவாக எதிர்பார்க்கும் காரணத்தால் ஊழியர்களுக்கு அதிகப்படியான பணி சுமை அளிக்கப்படுகிறது. இந்த பணி சுமை மற்றும் லாப இலக்குகளை அடைய முடியாத பல மேலாளர்கள் தங்களுக்கு கீழ் இருக்கும் பணியாளர்களுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர்.
இதற்கு பெரிய உதாரணமாக டிவிட்டரில் வெளியான ஒரு வீடியோ தற்போது டெக் ஊழியர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு ஊழியர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் கொடுத்துள்ளது.

டிஜிட்டல் கல்வி சேவையில் தொழில்முனைவோராக இருக்கும் ரவி ஹண்டா என்பவர் டிவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்தார், இந்த வீடியோவில் கோடிங் நிஞ்சா என்ற ஒரு எட்டெக் சேவை நிறுவனத்தின் அலுவலகத்தின் காவலர், அலுவலகத்தின் கதவை உள் பக்கமாக பூட்டினார்.
இதற்கு வீடியோ எடுப்பவர் எதற்காக கதவுகளை பூட்டுகிறீர்கள் என கேட்டதற்கு, அலுவலகத்தின் மேனேஜர், தன்னிடம் அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஊழியரையும் வெளியில் அனுப்ப கூடாது எனவும், அதுவரையில் கதவுகளை பூட்ட சொன்னதாகவும் காவலர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோயில் கதவுகளில் Coding Ninjas என்று நிறுவனத்தின் பெயரும் தெளிவாக உள்ளது.
இந்த வீடியோவை யார் எடுத்தது, யார் வெளியிட்டது என்பது தெரியவில்லை என Ravi Handa கூறினாலும், இந்த சம்பவம் நடந்ததை Coding Ninjas நிர்வாகம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு உள்ளது மட்டும் அல்லாமல் அந்த மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வீடியோ ஊழியர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வரும் வேளையில், பலர் இதற்கு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிலர் ஊழியர்களை அடிமை போல் நடத்துகின்றனர், விலங்குகளை போல நடத்தப்படுகிறார்கள் என்றும் டிவீட் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து அன்குஷ் சிங்காள் என்பவர் Ravi Handa வீடியோ பதிவுக்கு கீழ், இதேபோன்ற சம்பவம் எங்கள் சேல்ஸ் அலுவலகத்தில் கடந்த வாரம் நடந்தது. கதவுகள் 10-15 நிமிடம் மூடப்பட்டது, இது சேல்ஸ் டீம்-ன் தவறான முடிவுகளால் நடத்தப்பட்டது என டிவீட் செய்துள்ளார்.

இந்த நிலையில் Coding Ninjas தனது டிவிட்டர் கணக்கில் சமீபத்தில் எங்கள் அலுவலகம் ஒன்றில் நடந்த சம்பவம் ஒரு ஊழியரின் வருந்தத்தக்க செயலால் ஏற்பட்டது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சில நிமிடங்களில் அது உடனடியாக சரிசெய்யப்பட்டது, மேலும் ஊழியர் தனது தவறை ஒப்புக்கொண்டார் மற்றும் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டார் எனவும் தெரிவித்துள்ளது.
Indian edtech founders are now literally locking in their employees.
— Ravi Handa (@ravihanda) June 3, 2023
Get the hell out of this country.
Nowhere else would anyone dare to pull off something like this. pic.twitter.com/zTFuN6vDCm
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications