தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்கள் காபியைத் தான் அதிகளவில் குடிக்கிறார்கள். 2023இல் ஒரு காபி கடையை திறந்தால் நல்ல வியாபாரத்தை நடத்தி கை நிறைய லாபத்தை சம்பாதிக்கலாம்.
உலகளவில் 2023இல் காபி மார்க்கெட் 494 பில்லியன் வருவாயைப் பெற்றுள்ளதாகவும் இது 2015ஐ காட்டிலும் இருமடங்கு அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
லாக்டவுன்-க்கு பின்பு இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக பல நிறுவனங்கள் துவங்கப்பட்டு அதிகளவிலான முதலீட்டை திரட்டி பெரும் வெற்றியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவில் டீ வெறியர்களுக்கு இணையாக காஃபி பியர்களும் அதிகரித்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

2020-2025இல் காபி தொழிலில் வருடாந்திர கூட்டு உற்பத்தி விகிதம் 13 சதவீதமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காபி கலாசாரம் வளர்ச்சியினாலும் சிறப்பு வகை காபி உற்பத்தியினாலும் உடல் நலத்துக்கு நன்மை தரும் பயன்பாடு இருப்பதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும் ஒரு காபி கடையைத் தொடங்குவது நடைமுறையில் சில சிக்கல்கள் உள்ளன.
காபி கடைக்கு குறிப்பிட்ட அளவு முதலீடு கணக்கு எல்லாம் கிடையாது. கடை அமையும் இடம், இன்டீரியர் டிசைன், பர்னிச்சர் இன்னும் பல அம்சங்களைப் பொருத்து செலவுகள் இருக்கும். தற்போதைய சந்தை நிலவரத்தின் படி ரூ.5 முதல் ரூ.20 லட்சத்துக்குள் நல்லதொரு காபி கடையை அமைக்கலாம்.
கடையை சிறப்பாக நடத்தி வந்தால் அது வெற்றிகரமாக லாபத்தை ஈட்டித் தரும். அத்துடன் கூடுதலாக சில உணவுப் பொருட்களையும் சேர்த்து விற்றால் குறைந்தபட்ச மூலதனத்தில் நிறைய லாபத்தைப் பார்க்கலாம். இது மற்ற தொழில்களைக் காட்டிலும் சிறப்பானது.
கடை அமைந்திருக்கும் இடைத்தைப் பொருத்து தினசரி ரூ.10,000 முதல் ரூ.40,000 சம்பாதிக்கலாம். செலவுகள் போக மாதம் ரூ.40,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை லாபம் பார்க்கலாம். காபியை காலை, மாலை இருநேரமும் மக்கள் விரும்பி சாப்பிடுவதால் அதற்கு எப்பவும் டிமாண்ட் இருக்கும்.
கடை நன்றாக ஓடினால் பல்வேறு பகுதிகளில் கிளைகள் அமைத்து செயல்படலாம். காபி தொழிலுக்கு தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் தரத் தேவையில்லை. சிறிய முதலீட்டில் இந்தத் தொழிலைச் செய்யலாம்.
கடைகளில் வைத்து விற்பதோடு பல்வேறு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களுக்கும் பார்சல் காபியை விற்று நன்றாக சம்பாதிக்கலாம்.
காபி இன்றைக்கு மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டதால் இந்தத் தொழில் மக்களுக்கு நல்லதொரு லாபத்தைத் தரும் தொழிலாக மாறி விட்டது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications