இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் 12000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிய நிலையில், கடந்த மூன்று மாதங்களில் இருநிறுவனங்களை வாங்கியுள்ளது - ListEngage 72.8 மில்லியன் டாலருக்கும், Coastal Cloud 700 மில்லியன் டாலருக்கும் வாங்கியுள்ளது. இவ்விரு நிறுவனத்தையும் பணமாக கொடுத்து வாங்கியுள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் தனது பண இருப்பை முதலீடா மாற்றியுள்ளது.
இந்த டிரெண்ட் தற்போது ஒட்டுமொத்த இந்திய ஐடி சேவை துறையை ஆட்கொண்டு உள்ளது என்பது தான் வியப்படையும் விஷயமாக உள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான கோஃபோர்ஜ் அமெரிக்காவைச் சேர்ந்த என்ஜினியரிங் சேவை நிறுவனமான என்கோரா என்னும் நிறுவனத்தை 2.35 பில்லியன் டாலர் மதிப்பில் மொத்தமாக கைப்பற்றியுள்ளது.

கோஃபோர்ஜ் - என்கோரா மத்தியிலான ஒப்பந்தம் டிசம்பர் 26, 2025 அன்று அறிவிக்கப்பட்டது. இது கைப்பற்றலுக்கான முழு தொகையும் பங்கு மாற்று முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு. இதன் மூலம் கோஃபோர்ஜ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சேவைகள் பெரிய அளவில் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோஃபோர்ஜ், என்கோரா நிறுவனத்தை வாங்குவதற்கு பணத்தை செலுத்தாமல் பங்குகளை மாற்றும் முறையில் செயல்படுத்துகிறது. கோஃபோர்ஜ் நிறுவனம் 9.38 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு 1,815.91 ரூபாய் விலையில் கொடுக்க உள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 17,032 கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்தம் நிறைவடைந்த பிறகு என்கோரா பங்குதாரர்கள் கோஃபோர்ஜ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் சுமார் 21.25 சதவீதத்தை வைத்திருப்பர்கள்.
இரு நிறுவனங்களின் இணைப்பின் மூலம் 2027 நிதியாண்டில் சுமார் 2.5 பில்லியன் டாலர் வருவாயை கோஃபோர்ஜ் எட்டும் என கணிக்கப்படுகிறது. இதில் சுமார் 2 பில்லியன் டாலர் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான என்ஜினியரிங், க்ளவுட் மற்றும் டேட்டா சேவைகளில் இருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொருள் என்ஜினியரிங் சேவைகள் மட்டும் 1.25 பில்லியன் டாலருக்கு மேல் வருவாய் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ளவுட் சேவைகள் சுமார் 500 மில்லியன் டாலரும் டேட்டா என்ஜினியரிங் சேவைகள் 250 மில்லியன் டாலர் அளவில் பங்களிக்கும் என தெரிகிறது.
இதன் மூலம் கோஃபோர்ஜ் மாபெரும் ஏஐ சேவை நிறுவனமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் விசா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களை வாங்குவது மூலம் அமெரிக்கா வர்த்தகத்தை எவ்விதமான வரி ஆபத்துக்கள் இல்லாமல் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியாக தற்போது இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களை வாங்கி வருகிறது.
More From GoodReturns

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

ஈரான் போரில் முக்கிய திருப்பம்: பாதுகாப்பு படை தலைவர் கொலை.. நூலிழையில் உயிர் தப்பிய கமேனி மகன்!!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

துப்பு கொடுத்தால் துட்டு.. ஈரான் தலைவர் முஜ்தபா கமேனி தலைக்கு மெகா பரிசு.. அமெரிக்கா அறிவிப்பால் ஷாக்..!

16,000 பேரின் வேலை காலி.. மெட்டா நிறுவன சிஇஓ மார்க்-ஐ திட்டி தீர்க்கும் ஊழியர்கள்..!!

சாயம் வெளுக்க துவங்கியது.. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது.. அமெரிக்க முதலீட்டு நிறுவன அறிவிப்பால் ஷாக்..!!

15 நாட்களில் 40% மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போர் முடிவது தான் தீர்வா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!



Click it and Unblock the Notifications