சென்னை: இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களான காக்னிசன்ட் மற்றும் கேப்ஜெமினி 2023ஆம் ஆண்டில் குறைந்த அளவில் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்துள்ளது. 2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் சுமார் 151,607 பணியாளர்கள் குறைவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
காக்னிசன்ட் மற்றும் கேப்ஜெமினி நிறுவனங்கள், இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனங்களில், சுமார் 400,000 பேரை புதிதாக வேலைக்கு எடுக்கின்றனர். 2022ஆம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட காக்னிசன்ட் நிறுவனம் 132,000 புதிய ஊழியர்களைப் பணியமர்த்தியது.

பிரெஞ்சு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி, 2022 ஆம் ஆண்டு மொத்தம் 140,789 பணியாளர்களை நியமித்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில், காக்னிசன்ட் தேர்ந்தெடுத்த புதிய பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 60,000 ஆகக் குறைந்தது.
அதேபோல், கேப்ஜெமினி, 2023 ஆம் ஆண்டில், சுமார் 61,182 பேரை வேலைக்கு அமர்த்தியது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் காக்னிசன்டில் 72,000 மற்றும் கேப்ஜெமினியில் 79,607 புதிய பணியாளர்கள் குறைந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து மற்ற IT நிறுவனங்களான, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்களும் புதிய பணியாளர்களைக் குறைவாக நியமித்துள்ளது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 70,000 பணியாளர்களால் குறைந்துள்ளது.
எவரெஸ்ட் குரூப் எனப்படும் நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் பீட்டர் பெண்டர் சாமுவேல், "இந்த IT நிறுவனங்கள், தங்கள் அலுவலகங்களில் வேலையை விட்டு வெளியேறும் அதிக எண்ணிக்கையிலான நபர்களை ஈடுகட்ட, கோவிட் காலத்தில் அதிகமான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும், IT துறை வேகமாக வளரும் என்றும் எண்ணி ஆட்களை எடுத்ததாகவும், ஆனால் தற்போது, தொழில்துறை சற்று குறைந்துள்ளதால், இந்த நிறுவனங்களில் கிடைக்கும் வேலைகளுக்கு அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர். " என்றும் கூறியுள்ளார்.
பொருளாதார நிச்சயமற்ற நிலைமைகள் காரணமாக, ஊழியர்கள் தாங்களாகவே வெளியேறும் இயல்பான செயல்முறை, இந்த முன்னணி நிறுவனங்களுக்கு நடக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால், புதிய ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
காக்னிசன்ட் தனது நிறுவனத்தின் செயல்பாட்டை எளிமைப்படுத்தவும், நெறிப்படுத்தவும், பாண்டமிக் காலத்திற்குப் பிறகு, வேலை வாய்ப்புக்கு இடமளிக்கும் வகையில் அலுவலக இடத்தை சரிசெய்யவும், 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஒரு திட்டத்தைத் தொடங்கியது. அதற்காக சுமார் $229 மில்லியன் செலவு செய்தது.
காக்னிசன்ட் ஊழியர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டின் Q 1 காலாண்டில், 7,100 குறைந்து 344,400 ஆக இருந்தது. அதன் பணியாளர்களில் சுமார் 250,000 பேர் இந்தியாவில் உள்ளனர்.
கேப்ஜெமினி ஊழியர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டின் Q 1 காலாண்டில் 337,200 ஆகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 6 % குறைந்துள்ளது.சமீபத்தில் கூகுள் நிறுவனமும் தனது கோர் டீமில் இருக்கும் 200 பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
AI வளர்ச்சியின் காரணமாக புதிய பணியாளர்களை நியமிப்பது குறைந்துள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் குறைந்த அளவில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவும், அதிக அளவில் உள்ள ஊழியர்களை குறைக்கவும் இந்நிறுவனங்கள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications