சென்னை: இந்தியாவில் அதிகப்படியான ஐடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முன்னணி ஐடி சேவைத் துறை நிறுவனமான காக்னிசன்ட், சமீபத்தில் பிரஷ்ஷர்களுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பத்தைப் பெற உள்ளதாக அறிவித்திருந்தது, இந்த அறிவிப்பைக் கண்டு பல பட்டதாரிகள் வேலை வாங்கியாக வேண்டும் என்ற கனவுடன் இப்பதிவைப் பார்த்த போது தான் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு விஷயம் இருந்தது.
2024-ஆம் ஆண்டு பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியேறும் பட்டதாரிகளுக்கான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் காக்னிசென்ட் நிறுவனத்தில் சேர்வோருக்கு ஆண்டுக்கு ரூ.2.52 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைவான சம்பளம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை இந்தியன் டெக் & இன்பரா என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது மூலம் இந்தியா முழுக்க டெக் ஊழியர்கள், பட்டதாரிகள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பரவ துவங்கியது. இந்த பதிவில், "காக்னிசன்ட் நிறுவனம் 2024-ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளது. விண்ணப்பிக்கக் கடைசி தேதி ஆகஸ்ட் 14. சம்பளம் ஆண்டுக்கு ரூ.2.52 லட்சம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு இதுவரையில் 31 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பலர் இந்த பதிவுக்குக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய ஐடி சேவை துறையில் பிரஷ்ஷர்களுக்கான சம்பளம் நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் இருப்பது தொடர்பாக அவ்வப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
15 வருடத்திற்கு முன்பு ஐடி சேவை துறையில் புதிதாக சேர்வோருக்குக் கொடுக்கப்பட்ட 3.1- 3.5 லட்சம் ரூபாய் வரையிலான வருடாந்திர சம்பளத்தை இன்றும் உயர்த்தப்படாமல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியரான ரவி குமார் தலைமையிலான அமெரிக்க நிறுவனமான காக்னிசன்ட் இன்னும் குறைவாக வெறும் 2.52 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தைக் கொடுத்துள்ளது.
வருடம் 2.52 லட்சம் சம்பளம் என்றால் பிஎப் தொகை போக மாதம் 18000 முதல் 19000 ரூபாய் வரையிலான தொகையை மட்டுமே ஒருவரால் பெற முடியும். பெரு நகரங்களில் தற்போதைய விலைவாசியில் இது மிகவும் நெருக்கடியான வாழ்க்கை முறையைத் தான் அளிக்கும். இத்தகைய குறைவான சம்பளம் ஐடி துறையின் போக்கை தலைகீழாக மாற்றக்கூடும் என்று அச்சப்பட வைக்கிறது.
இந்த பதிவுக்குப் பலரும் பல விதமாக கமெண்ட் செய்துள்ளனர், அதில் சில உங்களுக்காக. "ரூ.2.52 லட்சம் மிகவும் தாராளமானது. பட்டதாரிகள் இந்த பணத்தை வைத்து என்ன செய்வார்கள்?" என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொருவர், "இந்த சம்பளம் 2002-ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட சம்பளம். வீடு, போக்குவரத்து, உணவு போன்ற செலவுகள் இதில் இல்லை. மாதம் ரூ.18,000 முதல் 19,000 வரை மட்டுமே கையில் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
"இந்த சம்பளத்தில் ஒருவர் எப்படி வாழ முடியும்? காக்னிசன்ட் நிறுவனம் ஒரு சோதனையை நடத்திக் கொண்டிருக்கிறது போல" என்று மற்றொருவர் கூறியுள்ளார். "ரூ.2.5 லட்சம் சம்பளமா? இதனால் தான் இளைய தலைமுறையினர் யூடியூபர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள்" என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
"தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்குவது நல்ல விஷயம் தான். ஆனால் ரூ.2.52 லட்சம் சம்பளம் கொடுப்பது கவலையளிக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு சராசரி சம்பளம் ரூ.3 லட்சம் இருந்தது. இப்போது குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம்?" என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications