ஐடி ஊழியர்களில் பலருக்கு வொர்க் ப்ரம் ஹோம் ரத்து செய்தது பெரிய நிம்மதியாக இருந்தாலும், சிலருக்கு வொர்க் ப்ரம் ஹோம் வேண்டும் என இன்றும் அடம்பிடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க மறுப்புறம் ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்த அலுவலகம் வருவதை கட்டாயமாக்கியுள்ளது.
இந்த நிலையில் பிற ஐடி நிறுவனங்களை போல் அல்லாமல் காக்னிசென்ட் அதன் ஊழியர்களை எந்த நேரத்திலும் அலுவலகத்திற்கு திரும்ப வரவேண்டும் என்பதில் கட்டாயப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து காக்னிசன்ட் தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் கூறுகையில், சமூக மூலதனம் முக்கியமானது என்பதை நாங்கள் உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களிடம் போதுமான அளவுக்கு ஃபிரஷ்ஷர்கள் இருப்பதால் வர்த்தகத்தை வளர்ச்சி பாதையில் வைக்க போதுமான பிடிமானம் உள்ளது.
இதனால் ப்ராஜெக்ட் மேலாளர்கள் அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலும் அது வர்த்தகத்தையும், செயல்பாடுகளை பாதிக்காது. இதனால் ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இயல்பாக எவ்விதமான உந்துதல் இல்லாமல் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப அழைக்கும் முறையை தற்போது கொண்டுள்ளோம் என காக்னிசன்ட் தலைமை நிர்வாக அதிகாரி ரவி குமார் தெரிவித்தார்.
காக்னிசென்ட் நிறுவனத்தில் இருக்கும் நெகிழ்வு தன்மை உண்மையில் அதிகளவிலான பெண்களை தொடர்ந்து பணியில் இருக்க வைக்கவும், புதிதாக பெண் ஊழியர்களை பணியில் சேர்க்கவும் பெரிய அளவில் உதவுகிறது என்றும் ரவி குமார் தெரிவித்தார்.
இந்தியாவில் செயல்படும் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் அதாவது ஐடி சேவை நிறுவனங்களில் காக்னிசன்ட், ரியல் எஸ்டேட் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் மிகவும் தீவிரமாக உள்ளது. ஒரு முதலீட்டாளர் மாநாட்டில், ரவி குமார் பெரிய நகரங்களில் 80,000 இடங்களைக் குறைத்து, அதன் ஒரு பகுதியை 2ஆம் தர நகரங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
காக்னிசென்ட் பணியாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் செலவுகளைக் குறைப்பதன் மூலம் இந்நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் செலவில் மார்ஜின் அளவு அதிகரிக்க முடியும். இதன் வாயிலாக சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி சேமிப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளார் ரவி குமார்.


Click it and Unblock the Notifications