உலகளாவிய முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான காக்னிசென்ட், தனது ஊழியர்களுக்குப் பல மாதங்களை ஒத்திவைத்து வந்த வேரியபிள் பே தொகையை அதன் சிஇஓ ரவிக்குமார் கூறியது போல் இந்த மார்ச் மாதம் முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் செயல்படும் பல முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் வேரியபிள் பே தொகையை நிறுத்தி வைத்தும், குறைக்கப்பட்டும் வழங்கி வருகிறது.
ஆனால் காக்னிசென்ட் தாமதம் ஆனாலும் அதிகப்படியான தொகையை அளித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. வேரியபிள் பே தொகையைப் பெறத் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் அடங்கிய மின்னஞ்சல்களை நிறுவனம் அனுப்பி வருகிறது.

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி, ஊழியர்களுக்கு காக்னிசென்ட் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையில் சுமார் 85 முதல் 115 சதவீதம் வரை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் இந்த வேரியபிள் பே பெற தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள வேரியபிள் பே தொகை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஊழியர்களின் கணக்கிற்கு டெபாசிட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டின் சம்பள விநியோக அட்டவணைகளுக்கு ஏற்ப சம்பளத்துடன் வேரியபிள் பே வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
காக்னிசென்ட் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள ஈமெயில் அடிப்படையில் பார்த்ததால் தற்போது கொடுக்கப்பட்டு உள்ள வேரியபிள் பே தொகை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தாக, காக்னிசென்ட் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த தகவல்களையும் கொடுத்துள்ளது. ஒவ்வொரு ஊழியரின் செயல்திறன், தகுதி, பதவி அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு சம்பள உயர்வு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications