ஐடி துறை மந்தநிலை காரணமாக ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைத்திருந்த ஐடி நிறுவனங்கள் தற்போது படிப்படியாக சம்பள உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
டிசிஎஸ் ஊதிய உயர்வு: அண்மையில் தான் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக கூறி அதிர்ச்சி தந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த ஊழியர்களை குளிர்விக்கும் வகையில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பை வெளியிட்டது. மார்ச் மாதமே வழங்க வேண்டிய ஊதிய உயர்வை இப்போது தான் அறிவித்தது.

காக்னிசென்ட்: இதன்படி டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 80 சதவீதம் பேருக்கு சம்பள உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஐடி சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக இயங்கி வருகிறது காக்னிசென்ட்.
ஊதிய உயர்வு: காக்னிசென்ட் நிறுவனம் தன்னுடைய இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் தங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்களுக்கு மெரிட் அடிப்படையில் ஊதியத்தை உயர்த்தி வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய 80 சதவீத ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் இந்த புதிய சம்பளமானது நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்து இருக்கிறது.
யாருக்கு கிடைக்கும்: ஃபிரஷர் நிலையில் தொடங்கி சீனியர் அசோசியேட் நிலை வரையிலான ஊழியர்கள் இந்த ஊதிய உயர்வை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஊழியர்கள் வேலை செய்யக்கூடிய நாடு மற்றும் அவர்களின் தனிப்பட்ட செயல்திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது என காக்னிசென்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்திருக்கிறார்.
எவ்வளவு ஊதிய உயர்வு: இந்தியாவில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கான சம்பள உயர்வு என்பது ஒற்றை இலக்கத்திலேயே அதிகமானதாக இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு நல்ல ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு காக்னிசென்ட் ஊழியர்களுக்கு 1 முதல் 5 சதவீதம் வரை ஊதிய உயர்வை வழங்கியது.
மார்ச் மாதமே வழங்க வேண்டியது: வழக்கமாக மார்ச் மாதத்திலேயே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் காக்னிசென்ட் நிறுவனம் மேக்ரோ பொருளாதார சூழல்களையும் ,ஐடிக்கான தேவை குறைந்திருப்பதையும் சுட்டி காட்டி ஊதிய உயர்வை தள்ளிப் போட்டது. காக்னிசென்ட்காக்னிசென்ட் நிறுவனத்தில் தற்போது 3, 43, 800 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications