அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான ஜதின் தலால் அவர்களை தனது புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய ஜதின் தலால் தனது பதவியை ராஜினாமா செய்தது விப்ரோ நிர்வாகத்திற்கு மட்டும் அல்லாமல் சக ஐடி ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.

இந்த நிலையில் ஜதின் தலால் சிடிஎஸ் எனப்படும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 2023 டிசம்பர் மாதம் முதல் தனது பணியை துவங்க உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது.
விப்ரோவில் இருந்து ராஜினாமா செய்த ஜதின் தலால், நவம்பர் இறுதி வரை விப்ரோ நிறுவனத்தில் CFO ஆக நோட்டீஸ் காலத்தில் பணியாற்ற உள்ளது. இதை தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இருந்து சிடிஎஸ் நிறுவனத்தில் சேர உள்ளார்.
சிடிஎஸ் நிறுவனத்தில் 2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியேற உள்ள Jan Siegmund இடத்தில் ஜதின் தலால் அமர உள்ளார். இதை தொடர்ந்து ஜதின் தலால் நேரடியாக காக்னிசென்ட் சிஇஓ ரவி குமார்-க்கு ரிப்போர்ட் செய்ய உள்ளார். ரவி குமார் முன்னாள் இன்போசிஸ் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jan Siegmund தலைமை நிதியியல் அதிகாரி பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து non-executive officer மற்றும் சிறப்பு ஆலோசகராக பணியற்ற உள்ளார். இதேபோல் விப்ரோ நிறுவனத்தில் ஜதின் தலால் இடத்தில் அபர்ணா என்பவர் நியமிக்கப்பட உள்ளார்.


Click it and Unblock the Notifications