காக்னிசண்ட் நிறுவனம் தங்களுடைய ஜிசிசி பிரிவுக்கான சர்வதேச தலைவராக சைலஜா ஜாஸ்யுலா செயல்படுவார் என அறிவித்துள்ளது. உலக அளவில் ஐடி சேவையில் காம்க்னிசண்ட் நிறுவனம் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதன் gcc மையங்கள் எனப்படும் பன்னாட்டு திறன் கிளைகளுக்கான உலகளாவிய தலைவராக சைலஜா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் பணியாற்றி வரக்கூடிய சைலஜா காக்னிசண்ட் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான பல்வேறு ஜிசிசி மையங்களுக்கு தலைமை பொறுப்பை ஏற்று நடத்துவார் என இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே செயல்பட்டு வரக்கூடிய ஜிசிசி மையங்களை மேம்படுத்துவது , புதிதாக ஜிசிசி மையங்களை நிறுவுவது புதிதாக வாடிக்கையாளர்களை ஈர்ப்பது மேலும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றி செயல்படுத்துவது என்பன உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இவர் மேற்கொள்வார் என காக்னிசண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைலஜா காக்னிசண்ட் நிறுவனத்தின் தொழில் குறித்து முழுமையான புரிதலை கொண்டிருப்பவர். நம்முடைய வாடிக்கையாளர்கள் யார், நம்முடைய குழுவினர் எவ்வாறு வேலை செய்வார்கள் என நிறுவனம் குறித்த அனைத்து தகவல்களையும் புரிந்து வைத்திருப்பவர் என்பதால் இந்த பதவிக்கு அவர் பொருத்தமானவர் என காக்னிசண்ட் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவுக்கான தலைவர் சூர்யா குமாடி தெரிவித்துள்ளார்.
அவருடைய பணி அனுபவமும் இதற்கு முன்பு அவர் செய்திருக்கும் சாதனைகளையும் பார்க்கும்போது காக்னிசண்ட் நிறுவனத்தின் ஜிசிசி பிரிவு இவரின் தலைமையில் சிறப்பான வளர்ச்சியை அடையும் என நம்பிக்கை வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சைலஜாவை பொருத்தவரை 2018 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை காக்னிசண்ட் நிறுவனத்தில் தான் பணியாற்றி வந்தார்.
காக்னிசண்ட் நிறுவனத்தின் ஐதராபாத் பிரிவுக்கான தலைவர் , பேங்கிங் மற்றும் பிற நிதி சேவைகளுக்கான டெலிவரி பிரிவு தலைவர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார். 2024 ஆம் ஆண்டில் ஈஒய் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த அவருக்கு மீண்டும் காக்னிசண்ட் நிறுவனத்திலேயே பணி வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முன்னதாக காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பல்வேறு மூத்த நிலை அதிகாரிகளும் மீண்டும் நிறுவனத்திற்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள் நிறுவனத்தில் மீண்டும் வேலைக்கு சேர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி தான் தற்போது சைலஜா காக்னிசண்ட் நிறுவனத்தில் பணிக்கு திரும்பி இருக்கிறார்.
சைலஜாவை பொறுத்தவரை ஐடி துறையில் 30 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர் குறிப்பாக நிதி சேவைகள் பிரிவில் சிறப்பாக பணி செய்தவர் என சொல்லப்படுகிறது. இவர் ஹெச்எஸ்பிசி, ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications