கப்பு முக்கியம் பிகிலு.. டிசிஎஸ், ஹெச்சிஎல்-ஐ ஓடவிட்ட காக்னிசென்ட்..!

உலகளவில் டெக் சேவைக்காகச் செலவு செய்வதில் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படத் துவங்கியிருக்கும் வேளையில், ஐடி சேவை நிறுவனங்களுக்குக் கிடைக்கக் கூடிய புதிய வர்த்தக வாய்ப்புகள் என்பது பெரியளவில் குறைந்துள்ளது. ஆனால் ஒரே திட்டத்திற்கு 10க்கும் அதிகமான முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போடத் துவங்கியுள்ளது.

அப்படி பிரிட்டன் நாட்டின் நெட்வொர்க் ரயில் இன்பராஸ்டக்ச்சர் லிமிடெட் நிறுவனத்தின் 133.2 மில்லியன் பவுன் மதிப்பிலான டெக்னாலஜி இன்பரா ஒப்பந்தத்தைக் கைப்பற்ற 5 பெரிய நிறுவனங்கள் போட்டிப்போட்ட நிலையில் காக்னிசென்ட் இந்த 7 வருடத் திட்டத்தைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கப்பு முக்கியம் பிகிலு.. டிசிஎஸ், ஹெச்சிஎல்-ஐ ஓடவிட்ட காக்னிசென்ட்..!

இந்த முக்கியமான திட்டத்தைக் கைப்பற்ற டிசிஎஸ், ஹெச்சிஎல், டிஎக்ஸ்சி டெக்னாலஜி, Atos ஐடி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுடன் போட்டிப்போட்ட காக்னிசென்ட் இந்த மாபெரும் திட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இந்த 7 வருட திட்டத்தில் பிரிட்டன் நாட்டின் நெட்வொர்க் ரயில் நிறுவனத்தின் டேட்டா சென்டர் கட்டமைப்பை மொத்தமாக நிர்வாகம் செய்யவும், இயக்கவும் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் டேட்டா சென்டர் மட்டும் அல்லாமல் நெட்வொர்க், சர்வர்கள், மெயின்ப்ரேம், கிளவுட் பிளாட்பார்ம்ஸ், ஐடி சேவைகள் என அனைத்தையும் நிர்வாகம் செய்ய வேண்டும்.

Also Read

இந்த திட்டத்தை கைப்பற்ற 5 நிறுவனங்கள் கடுமையாகப் போட்டிப்போட்ட நிலையில் இறுதியாக காக்னிசென்ட் 133.2 மில்லியன் பவுண்ட் திட்டத்தை வாட் வரி உடன் சேர்ந்து 159.84 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை வென்று மூலம் காக்னிசென்ட் நிறுவனத்தின் லார்ஜ் கான்டிராக்ட் பட்டியலில் +1 ஆகியுள்ளது, ஐடி சேவை நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தைப் பெறுவதைச் சிம்மசொப்பனமாகப் பார்க்கப்படும் வேளையில் இந்த 133 மில்லியன் பவுண்ட் ஒப்பந்தம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended For You

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான குவான்டாஸ் தனது தொழில்நுட்ப தளத்தை ஏஐ தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பதற்காக மொத்த திட்டத்தையும் அவுட்சோர்ஸ் செய்ய முடிவு செய்தது.

இந்த மாபெரும் திட்டத்தை அக்சென்சர் நிறுவனம் கைப்பற்றியது, இதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் சுமார் 850 ஊழியர்களுக்கான பணிகளை அவுட்சோர்ஸ் செய்யப்படும் நிலையில் இதில் பெரும்பகுதி பணிகளை இந்தியாவில் இருந்து செய்யப்பட உள்ளது. இதனால் அக்சென்சர் இந்திய அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+