இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்நிறுவனத்தில் சுமார் 21 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பணியாற்றிய ஜதின் தலால் தனது தலைமை நிதி அதிகாரி பதவியை ராஜினாமா செய்தது விப்ரோ நிர்வாகத்திற்கு மட்டும் அல்லாமல் சக ஐடி ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சி கொடுத்துவிட்டு CTS எனச் செல்லமாக அழைக்கப்படும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்-ல் புதிய தலைமை நிதி அதிகாரியாகச் சேர்ந்தார்.
இவர் மட்டும் அல்லாமல் விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் உட்படப் பல முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் இருந்து முக்கிய அதிகாரிகளை 2023ல் அடுத்தடுத்துக் காக்னிசென்ட் பெரும் சம்பளத்தில் பணியில் அமர்த்தியது. இதில் கடுப்பான விப்ரோ வெளியேறிய அதிகாரிகள் மீது அடுத்தடுத்து வழக்குத் தொடுத்து மற்ற உயர் அதிகாரிகளுக்குப் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முக்கியமாக விப்ரோ நிறுவனம், ஜதின் தலால் மீது 'ஒப்பந்தத்தை மீறியதாக’ 25.15 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடுத்தது. இதேபோல் அமெரிக்க அதிகாரி ஒப்பந்தம் மீறி காக்னிசென்ட் நிறுவனத்தில் சேர்ந்த காரணத்தால் வழக்குத் தொடுத்தது. மேலும் இன்போசிஸ் நிர்வாகம், காக்னிசென்ட் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தது.
இந்த நிலையில் சிடிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரவி குமார் டாவோஸ் நகரில் நடந்து வரும் WEF கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பேட்டியில், போட்டி நிறுவனங்களில் இருந்து உயர் அதிகாரிகளை ஈர்த்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுவது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குக் கூலாகப் பதில் அளித்தார் காக்னிசென்ட் சிஇஓ ரவி குமார், நான் என்னுடைய வேலையைத் தான் செய்கிறேன், என்னைப் பொருத்த வரையில் ஊழியர்களின் தேர்வாகக் காக்னிசென்ட் மாற வேண்டும் என்பது மட்டுமே இலக்கு எனத் தெரிவித்தார்.
காக்னிசென்ட் தொடர்ந்து மேம்பட்ட முறையில் கட்டமைக்கப்படும் எனக் கூறிய காக்னிசென்ட் சிஇஓ ரவி குமார், அப்படியானால் மேலும் போட்டி நிறுவனத்தில் இருந்து ஊழியர்களை ஈர்க்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குக் காக்னிசென்ட் சிஇஓ ரவி குமார், இது தொடர்ந்து செய்யவேண்டிய பணி. நான் பணியில் சேர்ந்த முதல் நாளில் இருந்து கூறி வருகிறேன், என்னுடைய முதல் சாய்ஸ் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்கள், இவர்கள் இலக்கை அடைய சரியானவர்களாக இருந்தால் கட்டாயம் லீடர்ஷிப் டீம்-ல் அவர்களுக்கு இடம் உண்டு.
எங்களுடைய நிர்வாகத் தளம் மிகவும் சிறப்பான, எங்களுடைய தொழில் முனைவோர் மனப்பான்மை விலைமதிப்பற்றது, எங்களுடைய சுறுசுறுப்பு விலைமதிப்பற்றது, எங்களிடம் வாடிக்கையாளர் முதன்மை என்ற மனப்பான்மை டிஎன்ஏ-விலேயே உள்ளது. இதை அனைத்தையும் அடுத்தக்கட்டதிற்குக் கொண்டு செல்லும் பணியில் நான் உள்ளேன் எனத் தெரிவித்தார் காக்னிசென்ட் சிஇஓ ரவி குமார்.
மேலும் எங்களுடைய லீடர்ஷிப் அணியில் எப்போதும் காலியான இடம் இருக்கும், இதனாஸ் பொருத்தமான ஊழியர்கள் தேடும் பணி எப்போதும் குறையாது எனத் தனது பதிலை முடித்தார். காக்னிசென்ட் சிஇஓ இருக்கும் ரவி குமார் முன்னாள் இன்போசிஸ் ஊழியர் ஆவார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications