சர்வதேச அளவில் முன்னணி ஐடி சேவை நிறுவனமான Cognizant, தனது மூன்றாவது காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை 3,800 அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பிற ஐடி சேவை நிறுவனங்களை போலவே காக்னிசென்ட் நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பாராக்குறியது. ஆனால் இதைவிட முக்கியமான ஒரு விஷயம் நடந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டு உடன் முடிந்த ஒரு வருட காலக்கட்டத்தில் Cognizant-ன் மொத்த ஊழியர் எண்ணிக்கை 6,500 குறைந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆகஸ்ட் மாதத்தில் காக்னிசென்ட் கையகப்படுத்திய Belcan-ல் 6,500 ஊழியர்கள் பணியாற்றினர், இவர்களை மொத்தமாக நிறுவனத்தில் சேர்த்த பின்பும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.

Cognizant-ன் CEO ஆக இந்தியரும், முன்னாள் இன்போசிஸ் ஊழியருமான ரவி குமார் பதவியேற்றிய காலத்தில் இருந்து, பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரவி குமார் வருகைக்கு பின்பு இந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளனர்.
முன்பு Cognizant-ஐ விட்டு வெளியேறிய சுமார் 13,000 பேர் மீண்டும் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இது நிறுவனம் மற்றும் அதன் வளர்ச்சியின் மீதான நம்பிக்கையில் நடந்த முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
மேலும் Cognizant-ல் பணியாளர் பயன்பாட்டு விகிதம் மூன்றாவது காலாண்டில் 84% ஆக அதிகரித்துள்ளது. இதோடு அடித்த ஆண்டில் காக்னிசென்ட் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் அதிகளவிலான ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் ஊழியர்கள் அட்ரிஷன் விகிதம் 14.6% ஆக உள்ளது, கடந்த 2 காலாண்டை ஒப்பிடுகையில் 150 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தாலும், நிறுவனத்தின் CFO, ஜதின் தலால், இந்த அளவு சிறப்பானதாகவே உள்ளதாக உறுதியளித்தார்.
மூன்றாவது காலாண்டில் டாப் 6 ஐடி சேவை நிறுவனங்களில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 17,500-க்கும் அதிகமாகியுள்ளது. ஆனால் HCL டெக்னாலஜிஸ் நிறுவனம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட State Street-உடனான கூட்டணி வர்த்தகத்தை விற்பனை செய்த காரணத்தால் அதன் அதன் பணியாளர் எண்ணிக்கை 780 பேர் குறைந்துள்ளனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications