இந்திய ஐடி சேவைத் துறை நிறுவனங்கள் டிரம்ப்-ன் வரி விதிப்பால் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில் டிசிஎஸ், விப்ரோ ஆகியவை தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவிக்கும் தினத்தை முடிவு செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதேபோல் அமெரிக்காவின் வரி விதிப்பு நுகர்வோர், ரீடைல், உற்பத்தி, BFSI ஆகிய துறைகளின் வர்த்தகம், வளர்ச்சியைப் பாதிக்கும் காரணத்தால் இத்துறையில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கும். இதனாலேயே சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளது, இதேவேளையில் ஐடி நிறுவனங்களின் சம்பளம் தொடர்ந்து வருவது முக்கிய விவாதமாக உள்ளது.

உதாரணமாக இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 2025ஆம் நிதியாண்டுக்கு ESOP வாயிலாக மட்டுமே 50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைப் பெற்றுள்ளார் என இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளில் அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் ஐடி துறையில் முக்கிய திருப்பமாக காக்னிசென்ட் சிஇஓ ரவி குமார் சம்பளம் 50 சதவீதம் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கள நிலவரம் வேறு விதமாக உள்ளது. என்ன நடக்கிறது..? ஐடி ஊழியர்கள் கட்டாயம் இதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான ரவி குமார் காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவியேற்ற நாளிலிருந்து அதிரடியாகச் செயல்பட்டது மூலம் பல பிரிவுகளில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றும், லாபம் , வருவாய் அளவுகளையும் உயர்த்தி காட்டியுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க வர்த்தக நிதியாண்டின் படி 2024ஆம் நிதியாண்டுக்கு ரவி குமார் பெற வேண்டிய 137 கோடி ரூபாய் சம்பளத்தில் வெறும் 70 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்ன கணக்கு இது..? வாங்க பார்ப்போம்.
காக்னிசென்ட் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காரணத்தால் அதன் நிதியியல் முடிகளை அமெரிக்காவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEC-யிடம் சமர்ப்பித்துள்ளது. இதில் 2024ஆம் நிதியாண்டுக்கு ரவி குமார் 70 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார் என்றும் 2023ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இவருடைய சம்பளம் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் 2024 ஆம் நிதியாண்டில் இவர் பெற வேண்டிய 137 கோடி ரூபாய் சம்பளத்தில் 50 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளது. ஏன் இந்த வித்தியாசம், என்ன நடக்கிறது..?
- ரவிகுமாரின் அடிப்படை சம்பளம் 10.25 கோடி ரூபாய், இது கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் அதிகம்.
- ACI டார்கெட் மூலம் இவருக்கு 20.49 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் அதிகம்
- பர்பாமென்ஸ் பங்கு யூனிட் பிரிவின் கீழ் 64 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 9 சதவீதம் அதிகம்.
- கட்டுப்படுத்தப்பட்ட பங்கு யூனிட் பிரிவின் கீழ் 42.68 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 9 சதவீதம் அதிகம்.
இப்படி இவருக்குக் கிடைக்க வேண்டிய 137 கோடி ரூபாயும் மொத்தமாகக் கிடைத்தாலும் பர்பாமென்ஸ் பங்கு யூனிட் பிரிவின் கீழ் கொடுக்கப்பட்ட 70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை இனி வரும் காலத்தில் தான் அவர் எடுக்க முடியும். இதுவும் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்து நிர்வாகம் கொடுக்கும் டார்கெட்-ஐ பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த தொகையும் கொடுக்கப்படும். இதனால் இந்த 70 கோடி ரூபாய் கணக்கில் வராது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications