புகழ்பெற்ற ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் ரவி குமாருக்கு மத்திய அரசு சார்பாக பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட உள்ளது.
பிரவாசி பாரதிய சம்மான் விருது என்பது சிறந்த வெளிநாடு இந்தியர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஒரு விருதாகும். இந்தியா வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதன்படி நடப்பு ஆண்டு சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி காக்னிசன்ட் நிறுவனத்தை சேர்ந்த தலைமை செயல் அதிகாரி ரவி குமார் நடப்பாண்டுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதினை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐடி துறையில் அவருடைய பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என அரசு கூறியுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படக்கூடிய முக்கியமான விருதாக இது கருதப்படுகிறது.
ரவி குமாருடன் சேர்த்து மொத்தம் 27 பேருக்கு நடப்பாண்டில் இந்த விருது வழங்கப்படுகிறது. பிரவாசி பாரதிய சம்மான் விருதினை பொருத்தவரை துணை குடியரசு தலைவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டி வழங்கப்படும் பரிந்துரைகளின் பெயரில் விருதாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தக் குழுவின் துணைத் தலைவராக வெளியுறவுத்துறை அமைச்சர் செயல்படுகிறார்.
அரசியல், சமூக சேவை, கல்வி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படக்கூடிய நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒன்றிணைக்க கூடிய பிரபாஸ் பாரதிய நிவாஸ் மாநாடு நடத்தப்படுகிறது. ஜனவரி 8 முதல் 10ஆம் தேதி வரை இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக தான் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியர்களை தேர்வு செய்து இந்த பிரபாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் கையில் இந்த விருது வழங்கப்படும்.
ரவி குமார் ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒடியா பூர்வீகத்தை கொண்டு ஃபார்ச்சூன் 200 நிறுவனங்கள் பட்டியலில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கக்கூடிய முதல் நபர் என்ற பெருமை ரவி குமாருக்கு உண்டு. ஒடிசா மாநிலத்தின் பேராம்பூரில் பிறந்தவர் ரவி குமார். சிவாஜி பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த அவர் பின்னர் சேவியர் கல்வி நிறுவனத்தில் எம் பி ஏ படிப்பை முடித்தார்.
பாபா அணு ஆராய்ச்சி ஆய்வு மையத்தி அணு ஆய்வாளராக வேலையை தொடங்கியவர் பின்னர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். 2016 முதல் 2022 வரை பல்வேறு ஐடி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2023 ஆம் ஆண்டு காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
Story Written By: Devika
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications