Cognizant சிஇஓ சம்பளம் 14% உயர்வு! வருமானமே இல்லையென புலம்பும் IT நிறுவனங்கள் CEOக்கு வாரி வழங்குவது எப்படி?

உலகளவில் ஐடி சேவை வழங்கும் நிறுவனங்கள் வருமானத்தை இழந்து தவிக்கின்றன. இதற்கு அமெரிக்க பொருளாதாரம் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் உள்ளிட்டவை காரணமாக ஐடி நிறுவனங்களுக்கு சவால் மிகுந்த ஆண்டாக இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைந்து இருப்பதும் காலாண்டு முடிவுகள் மூலம் தெரிய வந்தன. நிறுவனங்களின் வருவாய் குறைந்து இருந்தாலும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு பெற்று இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. முன்னணி ஐடி சேவை நிறுவனமாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது.

 Cognizant வருமானமே இல்லையென புலம்பும் Cognizant சிஇஓ-க்கு சம்பளத்தை வாரி வழங்குவது எப்படி?

காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் ரவிக்குமார். அவருடைய ஆண்டு ஊதியம் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் நிதி ஆண்டில் 8.2 மில்லியன் டாலர்கள் என உயர்ந்திருக்கிறது. அதாவது 2023இல் 7.2 மில்லியன் டாலர்களை ஊதியமாக பெற்ற ரவிக்குமார் 2024 ஆம் ஆண்டில் 14 சதவீத ஊதிய உயர்வு பெற்றிருக்கிறார்.

பொதுவாக இதுபோன்ற பெரிய நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஊதியம் மட்டுமில்லாமல் பல்வேறு அலவன்சுகளும் கிடைக்கும், குறிப்பிட்ட அளவு பங்குகளும் ஒதுக்கீடு செய்யப்படும். டைம்ஸ் ஆப் இந்தியா அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையத்தில் காக்னிசண்ட் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தின் அடிப்படையில் அதன் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமாரின் ஊதியம் குறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

சர்வதேச அளவில் ஐடி நிறுவனங்கள் தற்போது பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டு இருக்கின்றன. அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்று வருவதால் அமெரிக்க நிறுவனங்கள் ஐடி சேவைகளுக்கு செலவிடுவதை குறைத்து விட்டன. இதன் காரணமாக இதனால் வருவாய்க்காக அமெரிக்காவை சார்ந்திருக்க கூடிய ஐடி நிறுவனங்கள் பெரிய அளவில் வருமானங்களை இழந்துள்ளன.

இதனை காரணம் காட்டி ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்கம், சம்பளம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நிலைமை இவ்வாறு இருக்கும் போது தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் ஊதியம் அதிகரித்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சலீல் பரேக்கின் ஆண்டு ஊதியம் 2024ஆம் நிதியாண்டில் 66 கோடியாக இருந்தது. எல்டிஐ மைண்ட்ரீ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டெபாசிஸ் சாட்டர்ஜியின் ஆண்டு ஊதியமும் 19.34 கோடி என பத்து சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. எல்&டி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் அமித் சதாவின் ஊதியம் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் நிதி ஆண்டில் 15 .4 கோடி ரூபாய் என இரண்டு மடங்காக உயர்ந்து இருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+